விஜய்க்கு என்ன பலம் இருக்கு?: வானதி சீனிவாசன் கேள்வி
கோவை: கோவையில் நேற்று பாஜ எம்எல்ஏவும், தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது: செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக யார் அழைத்தார்கள் என்பதை அவர் தான் கூற வேண்டும். எங்களை பொருத்தவரை அதிமுக கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டிய எண்ணம் கிடையாது. கூட்டணியை பலமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பது தான்...
பாஜவின் கைப்பாவையாக திகழும் அதிமுக; எஸ்ஐஆருக்கு ஆதரவு தெரிவித்து உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு
சென்னை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: இந்திய நாட்டில், மக்களின் மிக முக்கிய உரிமையான வாக்குரிமையை உறுதி செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்க்கும் நிலையில், ஒரே ஒரு கருப்பு ஆடு இந்த மக்கள் விரோத கொடூர செயலை...
வாக்கு திருட்டு, எஸ்ஐஆர் மோசடியை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: காங்கிரசாருக்கு செல்வப்பெருந்தகை அழைப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பாஜ குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பாஜ பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.இதை எதிர்த்து...
‘நானும் ரவுடிதான்’ என்பது போல என்னை ஏன் விமர்சிக்கவில்லை என்று வான்டடாக வண்டியில் ஏறும் எடப்பாடி: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை. ‘நானும் ரவுடிய்யா.. இந்த ஏரியாவுல ரவுடினு பார்ம் ஆயிட்டேன்ய்யா’ என வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துவது போல எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்ற போதும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல...
கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்: டிசம்பர் 9, 11 தேதிகளில் நடைபெறுகிறது
திருவனந்தபுரம்: கேரளாவில் 1199 உள்ளாட்சி அமைப்புகளுக்கான காலாவதி அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைமை தேர்தல் ஆணையாளர் ஷாஜகான் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 9ம் தேதியும்,...
பேரவைத் தேர்தல்: நாளை முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்
சென்னை: பேரவைத் தேர்தல்: அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்த கட்சிகள் நாளை முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைய அங்கீகாரம் பெற்ற கட்சிகள் பேரவை தேர்தல், பல்வேறு தேர்தல்களில் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பொதுச்...
தமிழ்நாட்டில் தேஜ கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோவை: தமிழ்நாட்டில் தேஜ கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என்று அமித்ஷாவே கூறிவிட்டார். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா அறிவித்துவிட்டார் ...
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்: டி.டி.வி. தினகரன்
சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விரக்தி காரணமாக என்னை ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மனநலம் குன்றியவர் போல் ஆர்.பி.உதயகுமார் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுயநலத்தால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். ...
சொல்லிட்டாங்க...
* எடப்பாடி பழனிசாமியை பார்த்தாலே ரெண்டே விஷயம்தான் ஞாபகம் வரும். ஒன்னு கால்.. இன்னொன்னு கார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். * ஐசிசி தலைவர் பதவியில் கங்குலி தான் இருந்திருக்க வேண்டும். தற்போது இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் அவர் நிச்சயம் அந்தப் பொறுப்பை அடைவார். அதை யாராலும் தடுக்க முடியாது. மேற்கு வங்க முதல்வர்...