இப்போது இருக்கும் கூட்டணி பிரியலாம், புதிய கூட்டணி அமையலாம் : அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
சென்னை :இப்போது இருக்கும் கூட்டணி பிரியலாம், புதிய கூட்டணி அமையலாம் என்று அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது; புதிய கூட்டணிகள் அமையலாம் என்றும் தற்போது இருக்கும் கூட்டணி கூட பிரியலாம் என்றும் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ...
சென்னையில் டி.டி.வி தினகரன் சதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகாத நிலையில் செங்கோட்டையன் மறுப்பு
ஈரோடு: சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.டி.வி தினகரனை செங்கோட்டையன் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன் என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுகொண்டிருகிறார். அது தொடர்பாகவே நான் நேற்று சென்னை சென்றிருந்தேன். சென்னையில் எனது சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று துரித ரயில் மூலமாக வீடு...
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க முடிவு
விழுப்புரம்; பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் அன்புமணியை கட்சியை விட்டே நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றுவதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாமக தலைவராக...
டி.டி.வி. தினகரனை சந்திக்கவில்லை : அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு
சென்னை : டி.டி.வி. தினகரனை சந்திக்கவில்லை என அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் சிகிச்சை பெறும் தனது மனைவியை சந்திக்கவே சென்றிருந்ததாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.டி.வி. தினகரனை செங்கோட்டையன் சந்தித்ததாக செய்தி வெளியானது. டி.டி.வி. தினகரனுடன் ஒருமணி நேரம் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது....
சொல்லிட்டாங்க...
* பை, பையாக பொய் வைத்துக்கொண்டு பேசும் அன்புமணியின் வேஷம் கலைந்து விட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று அவர் வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப் போகிறோம். - பாமக நிறுவனர் ராமதாஸ் * எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தொடரும் வரை, தே.ஜ.கூட்டணியில் இணைய முடியாது. - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ...
செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்துப் பேசுவேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னை: செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்துப் பேசுவேன் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். மேலும் 'எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என டிடிவி தினகரன் கூறியது நல்ல கருத்துதான். அதிமுகவை யார் இயக்குகிறார்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்' எண்வம் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ...
சென்னையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு
சென்னை: சென்னையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டுமென செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. ஏற்கனவே பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தினகரனை சந்தித்து பேசியிருந்தார்....
பீகார் தேர்தல் களத்தில் பரபரப்பு; காங்கிரஸ் செயற்குழுவில் ஒன்றிய அரசுக்கு கண்டனம்: ராகுல், கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் வியூகம் மற்றும் வாக்குத் திருட்டு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பாட்னாவில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்காளர் பட்டியல்...
அண்ணாமலைக்கும், எனக்கும் சண்டையை மூட்டுகிறீர்கள்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
சென்னை: நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயுமான கீதா வயது மூப்பு காரணமாக காலமானார். இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி...