சொல்லிட்டாங்க...
* தென்ஆப்பிரிக்காவில் வெள்ளை ஆப்பிரிக்கர்கள் கொல்லப்படுகின்றனர். அதனால் அந்நாட்டில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன். - அமெரிக்க அதிபர் டிரம்ப். * இந்தியாவே போற்றும் இயக்கமாக திமுக உள்ளது. இதுதான் சிலரது கண்களை உறுத்துகிறது. - முதல்வர் மு.க.ஸ்டாலின். ...
விஜய்யுடன் சேருவது டிடிவிக்குதான் கேவலம்: நடிகர் சரத்குமார் நச்
அவனியாபுரம்: பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகை கவுரி கிஷனிடம் எடை குறித்து கேள்வி கேட்டது தவறு. திரைப்பட விழாவில் படம் மற்றும் அதில் அவரது கேரக்டர் பற்றி மட்டுமே பேச வேண்டும். விழாவில் உடன் இருந்த நடிகர், இயக்குனர் இதனை கண்டித்திருக்க வேண்டும்....
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பூச்சாண்டிக்கு நான் பயப்பட மாட்டேன்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
ஓமலூர்: கொடநாட்டில் எடப்பாடி பழனிசாமி என்று கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் திட்டமிட்டு பரப்பும் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக 54ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம், ஓமலூரில் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்தியாவை பொறுத்தவரை...
யானைக்கு பூனை சவாலா; வேங்கைக்கு வெட்டுக்கிளி சவாலா? விஜய்க்கு காசிமுத்து மாணிக்கம் கண்டனம்
சென்னை: தமிழக முதல்வருக்கு சவால் விடுத்துள்ள த.வெ.க. தலைவர் விஜய்க்கு திமுக வர்த்தக அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிசாவையே வலிய சென்று ஏற்றுக்கொண்டவர் தளபதி மு.க.ஸ்டாலின். மணிக்கணிக்கில் கூட தாங்காது, ஆனால் மாத கணக்கில் சிறையை தாண்டியவர் எங்கள் தளபதி. தான் அரசியலில்...
திமுகவுடன் இணைப்பா? ஒரு வரியில் முடித்த ஓபிஎஸ்
அவனியாபுரம்: தேனி செல்வதற்காக சென்னையிலிருந்து நேற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு எந்த பதிலும் அளிக்காமல் அவர் சென்ற நிலையில், பின் தொடர்ந்த செய்தியாளர்கள், ‘‘வரும் ஜனவரியில், நீங்களும் திமுகவில் இணைய இருப்பதாக ஒரு வதந்தி பரவுகிறதே’’ என கேட்டபோது, ‘‘வதந்தி தானே’’...
அதிமுகவில் இருந்து யார் யார் வருவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்: மனோஜ்பாண்டியன் பதில்
நெல்லை: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் கடந்த 4ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அன்று மாலையே தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் நெல்லை வந்த அவர், நெல்லை மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நெல்லை மேற்கு ஆவுடையப்பன், மத்திய...
பணம் கொடுத்தால் தான் தவெகவில் பொறுப்பு : மகளிர் அணியினர் போர்க்கொடி
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்ட தவெக மகளிர் அணி அமைப்பாளர் மற்றும் 10 இளம் அமைப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைமை ஒரு அறிவிப்பை வௌியிட்டுள்ளது. ஆனால் தலைமை அறிவித்த மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் பட்டியலில் இருந்து 7 பேரை நீக்கி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனக்கு ஆதரவான 7 பேர்களை சேர்த்து தன்னிச்சையாக பட்டியலை...
கலைஞருடனான உறவு 3 தலைமுறை தாண்டிய நெருக்கம் கொண்டது: கமல்ஹாசன் புகழாரம்
சென்னை: கலைஞருடனான உறவு 3 தலைமுறையை தாண்டிய நெருக்கம் கொண்டது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: என் அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசனையும் கவுரப்படுத்திய முதல்வர், அன்புக்குரிய நண்பர் மு.க.ஸ்டாலின் மற்றும்...
‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பு முதல்வரிடம் வைக்கும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு: தாமதப்படுத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கவும் அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு
சென்னை: ‘’ஒன் டூ ஒன்’ மூலம் திமுக தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பின்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் தாமதப்படுத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கவும் அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் சட்டமன்றத்...