தமிழக வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவரை சேர்ப்பதா? பிரேமலதா கண்டனம்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, திருத்தணி முருகன் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் வாக்குரிமை பெறுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை, இருப்பினும் அவரவர் மாநிலங்களில் வாக்குரிமை பெற வேண்டும். தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்களை, வாக்காளர் பட்டியல் சேர்ப்பது தவறான நடவடிக்கை. உடனடியாக...
அம்மா குடிநீர், அம்மா உணவகம் என பெயர் வைத்துவிட்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிராக அதிமுக வழக்கு தொடர்வதா? அமைச்சர் கேள்வி
சென்னை: தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.62.60 லட்சம் செலவில் உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை மருத்துவ பயனாளிகள், மருத்துவ மாணவர்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த கால ஆட்சியில் அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா தீவு பூங்கா என்று...
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஒன்றிய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது: எல்.முருகன் அறிக்கை
சென்னை: தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஒன்றிய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது என்று எல்.முருகன் கூறியுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.32,000 கோடி மதிப்பில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தென் தமிழ்நாட்டில்...
ஆணவ கொலைகளை தடுக்க கடுமையான சிறப்பு சட்டம்: வைகோ வலியுறுத்தல்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விருத்தாசலத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜெயசூர்யாவின் மரணம் தொடர்பான வழக்கில் தற்போது ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தார். அவர் கூறியுள்ளது போல, தமிழ்நாட்டில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி...
மதுரையில் வரும் 21ம் தேதி தவெக மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
சென்னை: தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிநடை போட்டு வருவதை அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன். ஆனால்...
நம் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து தமிழக உரிமை போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுப்போம்: வீடியோ பதிவை வெளியிட்டு திமுக வேண்டுகோள்
சென்னை: தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்திலான வீடியோ ஒன்றை திமுக நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் தங்களது உரிமைக்காக ஓரணியில் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது. தாய் மண் என்பது ஒரு சொல் அல்ல. மக்களின்...
செல்வப்பெருந்தகை கண்டனம் மாணவர்கள் உயர்கல்வியில் அரசியல் செய்யும் ஆளுநர்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதா கடந்த ஏப்ரல் 28ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், வேண்டுமென்றே காலம்தாழ்த்தி நேற்று மசோதாவை குடியரசு தலைவருக்கு...
அரசியல் பிழையை மறைக்கவே எடப்பாடி சுற்றுப்பயணம் இந்திய தேர்தல் ஆணையம் பாஜ ஆணையமாகிவிட்டது: முத்தரசன் தாக்கு
சேலம்: இந்திய தேர்தல் ஆணையம் பாஜ ஆணையமாகிவிட்டது என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார். சேலத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் பாஜவோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்பதை, தனது பரப்புரையில் அவர் விளக்க...
வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு பாஜ கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்: திருமாவளவன் குற்றச்சாட்டு
திருச்சி: பாஜவின் முழுமையான கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் சிக்கியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக பாஜவுக்கு எதிராக வாக்களிப்பவர்களை வாக்காளர்...