ஆட்சியை ஆட்டைய போட நினைத்த டிடிவியின் பருப்பு எடப்பாடியிடம் வேகவில்லை: ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுத்தீர்களா? பாவம் உங்களை சும்மா விடாது; உதயகுமார் சாபம்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து டிடிவி.தினகரன் ஏதேதோ கூறி வருகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை. ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் டிடிவி.தினகரன். என் முகத்தில் விழிக்கக்கூடாது என்று கூட உத்தரவிட்டார். அதனால்...

தைலாபுரத்தில் ராமதாசுடன் அருள் எம்எல்ஏ சந்திப்பு: அன்புமணியை கைது செய்ய வலியுறுத்தி பேட்டி

By Karthik Yash
07 Nov 2025

திண்டிவனம்: வாழப்பாடி தாக்குதல் சம்பவத்துக்குபின் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், அன்புமணியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் கார் மீது வாழப்பாடியில் அன்புமணி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தைலாபுரம் வந்த...

சொல்லிட்டாங்க...

By Karthik Yash
07 Nov 2025

* மக்களை சந்திக்காமல், மக்களிடம் நேரடித் தொடர்பு இல்லாமல், திரைப்பட புகழை வைத்துக் கொண்டு, தான் மிகப்பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி விட்டதாக மாய பிம்பத்தை உருவாக்குகிறார்கள். - அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி. * ஜெயலலிதா மூலம் 3 முறை முதலமைச்சரானவர் ஓபிஎஸ். கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர் இபிஎஸ். - அதிமுக முன்னாள் அமைச்சர்...

யார் யாரோ கிளம்பி அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என கனவு காண்கிறார்கள் எந்த கொம்பனாலும் திமுகவை தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

By Karthik Yash
07 Nov 2025

சென்னை: இன்றைக்கு யார் யாரோ கிளம்பி, திமுக அழித்து விடலாம்; ஒழித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணை தலைவர் இரா.ஏ.பாபு...

எஸ்ஐஆர் தொடர்பாக மக்களின் கேள்வி, குழப்பம், சந்தேகம் தீர்க்க நடவடிக்கை: தேர்தல் ஆணையத்தை அணுக திமுக சட்டத்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

By Karthik Yash
07 Nov 2025

சென்னை: எஸ்ஐஆர் தொடர்பாக மக்களின் கேள்வி, குழப்பம், சந்தேகத்தை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக திமுக சட்டத்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபடும் திமுகவினருக்கு எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவிடும்...

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களிடத்தில் பிரசாரம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு

By Karthik Yash
07 Nov 2025

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களிடத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது. திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், புதுச்சேரி மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்...

திமுக இளைஞர் அணி சார்பில் திமுக 75 அறிவுத்திருவிழா நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

By Karthik Yash
07 Nov 2025

சென்னை: திமுக இளைஞர் அணி சார்பில் திமுக 75 அறிவுத்திருவிழா மாபெரும் நிகழ்ச்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி ‘திமுக 75 அறிவுத்திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை...

கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து

By Karthik Yash
07 Nov 2025

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பன்முகத்திறமையோடு தமிழ் திரையுலகை உலக தரத்துக்கு கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும்...

அப்போது செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓபிஎஸ் கரூர் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை விஜய் செய்கிறார்: மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ பேச்சு

By Karthik Yash
07 Nov 2025

சென்னை: மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமை வகித்தார். இதில், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள்,...

எஸ்ஐஆர் எதிர்த்த போராட்டம் பொதுமக்களுக்கு கம்யூனிஸ்ட் அழைப்பு

By Karthik Yash
07 Nov 2025

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழுக்கள், இடைக்குழுக்கள், கிளை அமைப்புகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் ஏற்படுத்தும் விளைவுகளை, பொதுமக்களுக்கு விளக்கி கூறி அணிதிரட்டி, ஆர்ப்பாட்ட இயக்கத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும். மக்களாட்சி முறையை பாதுகாக்கும் ஜனநாயக உரிமை போராட்டம்...