சட்டமன்ற தொகுதி வாரியாக வரும் 5ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம்: பாஜக மாநில செயலாளர் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தொகுதி வாரியாக வரும் 5ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் அறிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள்...

சமூகநீதி விடுதிகளில் மதமாற்ற புகார் மாணவர் விடுதிகளை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Karthik Yash
22 Sep 2025

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாக பணியாற்றி வரும் லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்கு பாரபட்சம் காட்டுவதாகவும், உணவுப்பொருட்களில் ஊழல் செய்வதாகவும்...

சொல்லிட்டாங்க...

By Karthik Yash
22 Sep 2025

* ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உறுதிக்கு அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஒரு சான்றாகும். - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா * கடந்த 8 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூல் எங்கே போனது? - சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ...

பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்: பாஜக தேசியத் தலைவருடன் முக்கிய ஆலோசனை

By Neethimaan
22 Sep 2025

சென்னை: பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை...

அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

By Neethimaan
22 Sep 2025

சென்னை: சென்னையில் அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனும் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தனர். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டோம் என டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார். அண்ணாமலை தனது நண்பர் எனவும் டி.டி.வி....

8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடி வசூல்; ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் வெறும் கண்துடைப்பு: தன்னிச்சையாக பெருமை தேடும் மோடி என விமர்சனம்

By Suresh
22 Sep 2025

புதுடெல்லி: புதிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அவர் தன்னிச்சையாக பெருமை தேடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு வரி விகிதங்கள் இருப்பதால், அதை...

2029, 2034ம் ஆண்டுகள் மட்டுமல்ல 2047 வரை மோடியே பிரதமர் வேட்பாளர்: ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு நெட்டிசன்கள் கிண்டல்

By Suresh
22 Sep 2025

புதுடெல்லி: வரும் தேர்தல்களிலும் மோடியே பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தடாலடியாக கூறியுள்ளார். தேசிய கட்சியான பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படாது என்ற விதிமுறை முன்பு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி உள்ளிட்ட பலரும் ஒதுக்கப்பட்டனர். இந்த சூழலில்,...

நீலகிரியில் நாளை எடப்பாடி பிரசாரம்: கே.ஏ.செங்கோட்டையன் திடீர் சென்னை பயணம்

By Suresh
22 Sep 2025

கோபி: நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திடீர் பயணமாக நள்ளிரவு சென்னை புறப்பட்டு சென்றார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி கோபியில் நிருபர்களிடம் கூறினார். இதற்கு 10 நாள் கால அவகாசம் அளித்திருந்தார்....

பாஜக தான் விஜயை இயக்குவதாக தெரிகிறது: சபாநாயகர் அப்பாவு பேட்டி

By Neethimaan
22 Sep 2025

நெல்லை: பாஜக தான் விஜயை இயக்குவதாக தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:- மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார் என்று நினைக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர்ந்து இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால், அதை...

தவெக தலைவர் விஜய் பேச்சில் அகந்தை அதிகமாக இருக்கிறது: சபாநாயகர் அப்பாவு

By MuthuKumar
22 Sep 2025

சென்னை: கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் பேசுவது போல பேசிவருகிறார். பிரதமர், முதலமைச்சர் பற்றி பேசும் போது கண்ணியத்துடனுன் கவனத்துடனும் பேசவேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார். தலைவா பட பிரச்சனைக்காக 3 நாள் கோடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்களல்ல என அப்பாவு கூறினார். ...