நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசியது ஆணவப்பேச்சு: முத்தரசன் பேட்டி
தர்மபுரி: தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் பிரசாரம் செய்தபோது, கம்யூனிஸ்ட் கட்சியே இல்லை என்று சொன்னார். அதன் பிறகு சிதம்பரத்தில் பேசும்போது, கம்யூனிஸ்ட் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்தால், ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று சொன்னார். அது ரத்தக்கறை படிந்த...
தமிழக சட்டமன்ற காங். தலைவர் ராஜேஷ்குமார் சோனியா, ராகுலுடன் திடீர் சந்திப்பு: அரசியல், கட்சி நிலவரம் குறித்து விவாதிப்பு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், சோனியா, ராகுலுடன் திடீரென சந்தித்து பேசியது காங்கிரசார் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியும் அதற்கான பணிகளை...
ஓ.பன்னீர்செல்வம் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு: நயினார் நாகேந்திரன் பேட்டி
மதுரை: ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினேன். ஓ.பன்னீர்செல்வத்தைப் போலவே டிடிவி. தினகரனிடமும் பேசினேன். ஓ.பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்சினையா அல்லது...
எம்பிக்களை சிஐஎஸ்எஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தம்.. அவைக்குள் ராணுவ நடவடிக்கை ஏன்?: திருச்சி சிவா பேட்டி
டெல்லி : வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் ஆளும் ஒன்றிய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனைக்கு குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டால் மத்திய தொழிற்படை பாதுகாவலர்கள் மூலம் ஒன்றிய...
இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதி யார் ? : செப்டம்பர் 9, 2025 அன்று தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
டெல்லி : இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதி தேர்வு செய்யும் தேர்தல் செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 21ம் தேதி, ஜகதீப் தன்கர் தனது உடல்நலக் காரணங்களால் துணை ஜனாதிபதிபதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்த அரசியலமைப்புச் சட்டப்படி 60 நாட்கள்...
ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் - வைகோ பேட்டி
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை மேற்கொண்டார். கவின் கொலை வழக்கில் காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். 2026ல்...
பாமகவின் வேரும், வியர்வையும் தைலாபுரத்தில்தான் உள்ளது அன்புமணி நடைபயணம் மக்கள் ஏற்கமாட்டார்கள்: ஒரே தலைவர் நான்தான்; ராமதாஸ் பரபரப்பு பேட்டி
திண்டிவனம்: பாமகவின் வேரும், வியர்வையும் தைலாபுரத்தில்தான் உள்ளது. அன்புமணியின் நடைபயணத்தால் துளியும் பயனில்லை, மக்களும், தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். பாமகவுக்கு ஒரே தலைவன் நான்தான் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும்தான் இருக்கிறது....
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை: ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். காலை நடை பயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார். அப்போது முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார். இதனிடையே பிரதமர் மோடி சந்திக்க மறுத்த நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து பன்னீர்செல்வம் அணி விலகியது. பாஜக கூட்டணியில் இன்று பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில் திமுக தலைவருடன்...
தேசிய நலனை கருத்தில் கொண்டே அனைத்து வகையான முடிவுகளும் எடுக்கப்படும் : ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு!!
டெல்லி: டிரம்ப் 25% வரி விதித்தது குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார். மேலும் ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதற்கு இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும்...