திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்பவர் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்பவர் தற்கொலை செய்த வழக்கில் கணவர் சதீஸ்வர், மாமியார் உமா, மாமனார் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ப்ரீத்தியின் உடலை அவரது பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் திருமணமான 10 மாதத்தில் ப்ரீத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ...
இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
சென்னை: இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியதாவது; இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நேற்று (06.08.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக...
அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி
சென்னை: தமிழ்நாட்டின் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு தாக்கல் செய்த பாஜக ஆதரவாளரான வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் விதித்துள்ளது. ...
ஐயா, ஐயா என்று சென்னவர்களை ராமதாஸ் என்று செல்ல வைத்தது அன்புமணி தான்: ராமதாஸ் வேதனை
விழுப்புரம்: பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து தனக்கு எதிராக செயல்பட தூண்டுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஐயா, ஐயா என்று சென்னவர்களை ராமதாஸ் என்று செல்ல வைத்தது அன்புமணி தான் என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் செல்கிறார். தைலாபுரம் வீட்டுக்கு என்னை சந்திக்க அன்புமணி வரவில்லை; நான்...
நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற வளாக குழு அறிக்கையை ரத்துசெய்யக் கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியில் இருந்து நீக்குவதற்கு தலைமை நீதிபதி அளித்த பரிந்துரையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி.மஸி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது....
தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வியட்நாம் நாட்டுடன் போட்டியிடுவதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு
வாஷிங்டன் : தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வியட்நாம் நாட்டுடன் போட்டியிடுவதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் ரோசோ பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருளாதார நிபுணரும் சிஎஸ்ஐஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் ரோசோ ப்ளூம்பர்க் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தொழிற் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில்...
இலங்கை கடற்படை கைது செய்த 14 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுதுறை அமைச்சர்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: நேற்று கைதான 14 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டில் 17வது முறையாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ...
மருத்துவமனைக்கு வராமல் சட்டவிரோதமாக விடுப்பில் இருந்த 51 மருத்துவர்கள் பணி நீக்கம்: கேரள சுகாதாரத்துறை அதிரடி
திருவனந்தபுரம்: கேரளாவில் பணிக்கு முறையாக வராத 51 மருத்துவர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அங்கீகாரம் இல்லாமல் பணிக்கு வராத ஊழியர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசு முன்னதாக இயக்குநரகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. தொடர்ந்து மருத்துவ ஊழியர்களுக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டும் , அவர்கள்...
விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க தயார்: பிரதமர் மோடி
டெல்லி: இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள், பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், அதற்கு தயாராக இருக்கிறேன் என பிதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க பால் மற்றும் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதில்லை...