சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் காவலருக்கு எதிரான மனு தள்ளுபடி
மதுரை: சொந்த மாவட்டத்தில் காவலர்கள் பணியாற்றுவதை எதிர்த்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த அசோக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: கீழ்நிலை காவலர்கள் தங்கள் மாவட்டத்திற்குள் மாற்றப்படுகிறார்கள். சில நேரங்களில் நிர்வாக காரணங்களுக்காக, பிற மாவட்டங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். இடமாற்றம் மற்றும் பணியமர்த்தல்...
சேலத்தில் போராட்டம் குறித்து தகவல் சேகரிக்க சென்ற எஸ்.ஐ.யை தாக்கி சிறைபிடித்த பெண்கள்
சேலம்: சேலத்தில் கம்பெனி மூடப்பட்ட விவகாரத்தில் உளவுப்பிரிவு அதிகாரியை தாக்கிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் புதுரோடு அருகே தனியார் எலக்ட்ரானிக் கம்பெனி செயல்பட்டு வந்தது. இங்கு 450க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த ஜூலை 1ம் தேதி இந்த கம்பெனி மூடப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர்கள்...
சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் போடவில்லை அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்ட விதிமுறைப்படி செல்லாது: ராமதாசுக்கு வெள்ளை துண்டை போட்டு நாடகம், பாமக பொதுச்செயலாளர் பரபரப்பு பேட்டி
திண்டிவனம்: அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்ட விதிமுறைப்படி செல்லாது, என பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர், தலைவர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் பாமக பொது செயலாளர் முரளிசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: அன்புமணி பொதுக்குழு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியும் அளிக்கவில்லை, தடையும்...
ஜாதி கலவர பேச்சு சீமானுக்கு எதிராக திருப்பூரில் போஸ்டர்
திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் பலவிதமான பேட்டிகளை அளித்து வருகிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சியில் உள்ள சாட்டை துரைமுருகன் யூ டியூப் சேனல் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகிறார். சமீபத்தில் வேளாளர் பெயரில் பேசிய சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோருக்கு...
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையை கடத்திய இளம்பெண்ணுக்கு தர்மஅடி: மக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண்ணுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி அருகே இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி திவ்யா(23). இவர் 2வது பிரசவத்திற்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 6ம் தேதி திவ்யாவிற்கு அறுவை சிகிச்சை...
வீட்டில் தயாரித்த பட்டாசு வெடித்து 3 பேர் கருகி பலி: ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவு
ஏழாயிரம்பண்ணை: சாத்தூர் அருகே உரிய அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் பொன்னு பாண்டியன்(47). நேற்று காலை 11 மணியளவில், இவரது வீட்டில் ...
டிரம்ப் 50% வரி விதிப்பு: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி நிறுத்தம்: கோவை தொழில்துறைக்கு ரூ.4,000 கோடி பாதிப்பு
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தநிலையில் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் அபராத...
நீர்ப்பாசன வாய்க்கால்கள் தூர்வார ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கால்வாய் பாசனத்தைச் சார்ந்த நிலங்களில் 85 விழுக்காடு நிலங்கள், காவிரி நீரை நம்பியுள்ளன. காவிரி ஆற்றில் லட்சக்கணக்கான கன அடி நீர் திறக்கப்பட்டாலும் கடைமடை பகுதி வரை நீர் செல்வதில்லை. இதற்கு காரணம் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததுதான். பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததும், பல வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளதும் ஏரி,...
பண்டிகை காலங்களில் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கு 20 % தள்ளுபடி: ரயில்வேயின் சூப்பர் ஆபர், முன்பதிவு ஆகஸ்ட் 14ம் தேதி தொடக்கம்
சென்னை: பண்டிகை காலங்களில் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் சேர்த்து பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கு கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது என இரண்டு பயணத்தையும் முன்கூட்டியே திட்டமிடுபவர்களுக்கு இந்த சலுகை உதவியாக இருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக, ஒரே வகுப்பில் பயணத்தை...