போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு
சென்னை: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு 7 எதிரிகளை கைது செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைபொருட்களை பறிமுதல் செய்த சென்னை பெருநகர ANIU காவல் குழுவினர் மற்றும் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பரிசுகளை வென்ற காவல் ஆளிநர்களுக்கு, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்துளளார். சென்னை...
திருவண்ணாமலையில் பவுர்ணமி முன்னிட்டு கிரிவல பாதையில் வசிக்கும் சாமியார்களிடம் சோதனை: டிஎஸ்பிக்கள் தலைமையில் 50 போலீசார் கண்காணிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர். அதன்படி இம்மாத பவுர்ணமி கிரிவலம் வரும் 8ம்தேதி நடைபெற உள்ளது. 8ம் தேதி வெள்ளிக்கிழமை, தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதால் இந்த மாதம் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கலாம்...
பருவமழை தொடங்கும் முன் அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
சென்னை: பருவமழை தொடங்கும் முன் அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு...
காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையர் தலைமையிடம் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 109 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு...
நீண்டகால உள்துறை அமைச்சர்: அத்வானியை பின்னுக்கு தள்ளிய அமித் ஷா
டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சராக பணியாற்றும் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் சாதனையை முறியடித்து, நாட்டின் நீண்டகால உள்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கடந்த 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரை, அதாவது 2,256 நாட்கள் நாட்டின் உள்துறை...
மத்தியப் பிரதேசத்தில் குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழப்பு
மத்தியப்பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலின் நுழைவு வாயிலில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது ...
நீலகிரி முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகள் ஆக்ரோஷ சண்டை: சுமங்கலா யானைக்கு காயம்
கூடலூர்: முதுமலை முகாமில் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டதில் வளர்ப்பு யானை சுமங்கலாவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளன. இங்கு குட்டி யானைகள், கும்கி யானைகள், ஓய்வு பெற்ற யானைகள்...
மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்: வாணியம்பாடி அருகே பொதுமக்கள் பாதிப்பு
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருப்பத்தூர், ஊத்தங்கரை, சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு உள்ளது. இங்கு வாணியம்பாடி தாலுகா போலீசாரின் வாகன சோதனைச்சாவடி மையம் உள்ளது. இந்த சோதனைசாவடியொட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி...
வேலூர் அருகே இன்று நடந்த பொய்கை மாட்டு சந்தையில் ரூ.80 லட்சத்திற்கு வர்த்தகம்
வேலூர்: வேலூர் அருகே பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று ரூ.80 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை செவ்வாய்க்கிழமையான இன்று வழக்கம்போல் நடந்தது. சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை...