அமெரிக்காவின் மிரட்டலுக்கு மத்தியில் ரஷ்யா பறந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: விரைவில் அமைச்சர் ஜெய்சங்கரும் பயணம்
புதுடெல்லி: ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் தற்சார்பு வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்டும் வகையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ சென்றுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதையும், உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகிப்பதையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும்,...
காங். பெண் எம்பியிடம் நகை பறித்தவன் கைது; டெல்லி போலீஸ் அதிரடி
புதுடெல்லி: டெல்லியில் நடைப்பயிற்சியின்போது தமிழக பெண் எம்பி சுதாவிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற குற்றவாளியை, காவல்துறை கைது செய்து நகையை மீட்டெடுத்தது. தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா, கடந்த 4ம் தேதி டெல்லியின் மிக உயரிய பாதுகாப்புப் பகுதியான சாணக்யபுரியில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். போலந்து தூதரகம்...
உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் சரண்!!
திருப்பூர்: உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் சரணடைந்துள்ளனர். எஸ்எஸ்ஐ சண்முகவேலை வெட்டிக் கொலை செய்ததாக மூர்த்தி, அவரது மகன் தங்கபாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு மகன் மணிகண்டனுக்கு வலைவீசி வருகின்றனர். திருப்பூர் உடுமலை அருகே சிக்கனூத்துவில் தந்தை மகன்களுக்கு இடையிலான தகராறை விசாரிக்கச் சென்ற போது...
சென்னை விமானநிலையத்தில் இயந்திர கோளாறால் விமானம் ஓடுபாதையில் நிறுத்தம்: ஒரு மணி நேர தாமதம்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று காலை 68 பயணிகள் உள்பட 73 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோறாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளை பொறியாளர்கள் சரிசெய்தபின், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது. சென்னை...
2027 உலகக் கோப்பையில் ரோகித்சர்மா, விராட்கோஹ்லி ஆடுவது சந்தேகம்: பிசிசிஐ புதிய திட்டம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெஸ்ட்இண்டீசில் நடந்த டி.20 உலக கோப்பை பைனலில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி பட்டம் வென்றது. அந்த உற்சாகத்துடன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித்சர்மா, விராட் கோஹ்லி மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் டி.20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். அதன்பின்னர் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு...
கூலித் தொழிலாளி, இளைஞர் வாங்கி கணக்கிலும் 37 இலக்க தொகை வரவு: இரு சம்பவங்களும் கோட்டக் மஹிந்திரா கணக்கில் நிகழ்ந்துள்ளது
பாட்னா: வங்கி கணக்கில் கோடி கணக்கான ரூபாய் பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட செய்தியை அவ்வப்போது கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் கணக்கிட முடியாத அளவு இலக்கங்களை கொண்ட தொகை வரவு வைக்கப்பட்ட அதிசய நிகழ்வு இரு வேறு இடங்களில் நிகழ்ந்துள்ளது. கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் 20 வயது தீபக். கடந்த 3ம் தேதி இரவு...
அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை, பெண்கள் ஒருவர் கூட இல்லை : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்
மதுரை : அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்தனை பேர் பட்டியல் சாதி, பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை (எண். 2469/04.08.2025) நாடாளுமன்றத்தில்...
பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு!!
சென்னை: பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னைத்தானே தலைவர் என சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், மாமல்லபுரத்தில் ஆக.9ம் தேதி நடக்கும் பாமகவின் பொதுக்குழு...
உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம்: பலி 5ஆக உயர்வு
உத்தராகண்ட்: உத்தரகாசி காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் காணாமல் போன 13 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ...