பெரியபாளையம் காவலர் குடியிருப்பில் துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
ஊத்துக்கோட்டை, நவ.14: பெரியபாளையம் காவலர் குடியிருப்பில் பறிமுதல் வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இவற்றை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பெரியபாளையம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் தாய் கிராமம், குக்கிராமங்கள் என 73 கிராமங்கள் உள்ளன. இதில், ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட தற்போது 30க்கும் மேற்பட்ட போலீசார்...
ஆட்சி அமைக்கப்போவது யார்?.. பீகார் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது
பாட்னா: பீகார் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. ஆளும் தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ தலா...
பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்
சென்னை: தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசிநாள். டெல்டா மாவட்டங்கள், திருச்சியில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் இணை இயக்குனர்கள் அறிவுறுத்தியுள்ளார். ...
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமதுவின் வீடு இடித்துத் தள்ளபட்டதாக தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமதுவின் வீடு பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10ம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில், அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து 13 பேர் பலியாகினர். 27 பேர்...
இந்தியாவில் பாமாயில் இறக்குமதி சரிந்தது
டெல்லி: 2024-25ல் நாட்டின் பாமாயில் இறக்குமதி இதுவரை இல்லாத அளவு சரிந்துள்ளதாக எண்ணெய் பிரித்தெடுப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாமாயில் இறக்குமதி 2023-24 ஆண்டை விட 15.9 சதவீதம் குறைந்து 75.8 லட்சம் டன்னாக மாறியது. சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 59 சதவீதம் அதிகரித்து 54.7 லட்சம் டன்னாக மாறியுள்ளது. ...
இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
ட்ரெய்லர் வாகனத்தில் விமானம் எடுத்து செல்லப்பட்டது
புதுக்கோட்டை: கீரனூர் அருகே நேற்று சாலையில் தரையிறங்கிய பயிற்சி விமானம் எடுத்துச் செல்லப்பட்டது. கீரனூர் அருகே அம்மா சத்திரத்தில் பயிற்சி விமானம் நேற்று சாலையில் தரையிறங்கியது. கிரேன் மற்றும் 10 தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் ட்ரெய்லர் வாகனத்தில் விமானம் எடுத்துச் செல்லப்பட்டது. சேலத்தில் இருந்து வந்த பயிற்சி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்மாசத்திரத்தில்...
சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப முடியாததால் காய்ந்து வீணான 50 டன் கரும்புகள்: விவசாயி வேதனை
திருவள்ளூர்: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப முடியாததால், 50 டன் கரும்பு காய்ந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு 2025-26ம் ஆண்டு அரைவைப் பருவத்திற்கு 2051 விவசாயிகளிடமிருந்து 7505 ஏக்கர் கரும்பு, ஆலைக்கு பதிவு...
இந்தியாவில் 21 மாநிலங்களில் நீரிழிவு, உடல் எடை அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
* இன்று உலக நீரிழிவு நோய் தினம் சென்னை: உலக அளவில் அதிகரித்து வரும் சுகாதார சவால்களில் ஒன்றாக நீரிழிவு நோய் உள்ளது. இதுபற்றி அறிந்து கொள்வது, வராமல் தடுப்பது மற்றும் வந்தால் கட்டுக்குள் வைத்திருப்பது பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில்...