13 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை அனுமதி
விருதுநகர்: ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக மலை ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையும், கோயில் நிர்வாகமும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன. ...
ஈரான், அமெரிக்க படைகள் தாக்குதலை நிறுத்தின
கடந்த இரு நாட்களாக அமெரிக்காவும் ஈரானும் நடத்தி வந்த குண்டு வீச்சையும் தாக்குதல்களையும் நிறுத்தி உள்ளன. ஈரான்-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும் மத்தியஸ்த நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. ஈரானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ...
12%-க்கும் மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகளை நேரடியாக வாங்க தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவு!
டெல்லி: 12%-க்கும் மேல் ஆல்கஹால் கலந்த இருமல் சிரப், டானிக்குகள், டிஞ்சர்களை இனி மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வாங்க தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு. 30 மில்லிக்கும் அதிகமான பாட்டில்களில் விற்கப்படும் இதுபோன்ற மருந்துகளை வாங்குவோரின் விவரங்களை தனியாகப் பதிவேட்டில் பராமரிக்கவும் மருந்தகங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ...
எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் தேவையில்லையா.! ஹைட்ரஜன் தான் எதிர்காலம்.. ஒன்றிய அமைச்சர் கருத்து
டெல்லி: ஹைட்ரஜன் தான் இந்திய போக்குவரத்து துறையின் எதிர்காலம் என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபட தெரிவித்து உள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த எரிபொருள் மாற்றத்தை ஊக்குவிக்க, தற்போது இந்தியாவின் 10 முக்கிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் வாகனங்களின் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறி இருக்கிறார். இது...
நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ...
முதலமைச்சர் விஜய் தனக்கு உரிய பொறுப்புணர்வை புரிந்துகொண்டு பேச வேண்டும்: கனிமொழி
சென்னை: முதலமைச்சர் விஜய் தனக்கு உரிய பொறுப்புணர்வை புரிந்துகொண்டு பேச வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். விசாரணையில் உள்ள கரூர் நெரிசல் பற்றி பொறுப்போடு விஜய் பேசவில்லை. கரூர் விவகாரத்தில் மக்களோடு இருந்தவர்கள், உதவி செய்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறியுள்ளார். ...
கரூர் உயிரிழப்பு பற்றி பொய்களை கட்டமைக்கிறார் விஜய்: டி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: கரூரில் நெரிசலை திசைதிருப்பும் வகையில் பல பொய்களை விஜய் கட்டமைக்கிறார் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தராகண்டில் கோயில் கூட்ட நெரிசலில் ஏற்பட்டு 40 பேர் இறந்தனர், யாராவது ஏதாவதுசெய்து பலி ஏற்படவில்லை. மருத்துவமனைக்கு கூட விஜய் சென்று மக்களை பார்க்கவில்லை என டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டியுள்ளார். அரசு பொய் பேசினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
ஒசூரில் புதிய விமானம் நிலையம் அமைக்க தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - மக்கள் குற்றச்சாட்டு
ஒசூர்: ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒசூரில் புதிய விமானம் நிலையம் அமைக்க தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஒசூரில் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒசூரில்...