டொனால்டு டிரம்புடன் பேசமாட்டேன்; மோடி, ஜின்பிங்குடன் பேச போகிறேன்: அமெரிக்கா மீது பிரேசில் அதிபர் காட்டம்
பிரேசிலியா: அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகளுக்கு மத்தியில், அந்நாட்டு அதிபர் டிரம்பிடம் பேசமாட்டேன். இந்திய பிரதமர், சீனப் பிரதமரிடம் பேசப்போகிறேன் என பிரேசில் அதிபர் லூலா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையேயான வர்த்தக உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 40% வரியை விதித்ததால், மொத்த...
உங்களுக்கு உதவுவதற்காக இந்தியா அங்கு வரவில்லை: சச்சின் டெண்டுல்கர் சாடல்
மும்பை: உங்களுடைய பவுலர்கள், வீரர்கள் சென்று ஓய்வு பெறவேண்டும், அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதற்காக நாங்கள் கைக்குலுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படி சரி? என 4வது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் உடன் ஜடேஜா கைக்குலுக்க மறுத்தது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையேயான 4வது டெஸ்ட்...
தந்தைக்கு எதிராக திரும்பிய மகன்; 5 கட்சி கூட்டணியில் தேஜ் போட்டி: பீகார் அரசியலில் பெரும் குழப்பம்
பாட்னா: தந்தையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பிரதாப் யாதவ், பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஐந்து கட்சிகளுடன் புதிய கூட்டணியை அமைத்து போட்டியிட உள்ளார். பீகார் மாநில முன்னாள் அமைச்சரான தேஜ் பிரதாப் யாதவை, அவரது தந்தையான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த மே 25ம் தேதி...
திருப்பூரில் மேலும் ஒரு வரதட்சணைக் கொடுமை : திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!
திருப்பூர் : திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது...
இந்தியாவை தொடர்ந்து மிரட்டும் டிரம்ப்; மோடியின் ‘கட்டித் தழுவல்’ கொள்கை என்னானது? காங்கிரஸ் தலைவர்கள் கடும் தாக்குதல்
புதுடெல்லி: ரஷ்யாவுடனான வர்த்தகத்தைக் காரணம் காட்டி டிரம்ப் விடுக்கும் மிரட்டல்களுக்குப் பிரதமர் மோடி பதிலளிக்காத நிலையில், அவரது வெளியுறவுக் கொள்கை வெறும் போட்டோஷூட் நிகழ்வுகளால் ஆனதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டு வரும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க...
தேமுதிகவை தவிர விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்த கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
வேலூர்: விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்; வரும் சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கப் போகிறது? எப்படி எல்லாம் ஜெயிக்க வேண்டும் எங்கெல்லாம் ஜெயிக்க வேண்டும் என கலந்து ஆலோசனை செய்து வருகிறோம். அந்த...
ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0ஆக பதிவு
மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா கிழக்கு தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.0ஆக பதிவாகியுள்ளது. ...
திருவிழாவுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை 7 நாட்களில் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: திருவிழாவுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை 7 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலதாமதத்தால் திருவிழாவுக்கு வசூலித்த நிதி, நீதிமன்றத்தில் வழக்கு செலவுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரியே விழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும் என நீதிபதி தெரிவித்துள்ளார். கோவை...
“மாதவரத்தில் ஓரணியில் தமிழ்நாடு’’ திமுக உறுப்பினர் சேர்ப்பு
மாதவரம்: சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில், 17வது வார்டு வடபெரும்பாக்கம் பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. பகுதி செயலாளர் புழல் எம்.நாராயணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கருணாகரன், மூர்த்தி, பாலாஜி, பார்த்தசாரதி, திவாகர், வக்கீல் எம்.என்.தளபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள், மகளிர் உரிமைத் தொகை, வீடு...