5 மற்றும் 6வது மண்டலங்களில் தற்காலிக பணியாளர்கள் மூலம் முழுவீச்சில் தூய்மைப்பணிகள்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை: மண்டலம் 5 மற்றும் 6ல் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் விருப்ப கடிதத்தை கொடுத்து பணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் மூலம் தூய்மைப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை பணிகளில் தனியார்மயமாக்கல் முறையை பின்பற்றி, சேவையின் தரத்தை...
பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் எங்கே? கபில் சிபல் கேள்வி
புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டு பதவியேற்ற துணைஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை மாதம் 22ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த பின்னர் தன்கர் குறித்த எந்த தகவலும் இல்லை. இது குறித்து கபில் சிபல் கூறுகையில்,‘‘ஜூலை...
ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு வழக்கு மாஜி முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி கைது
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் முதல்வராக பதவி வகித்தபோது, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக தலைமை காவலர் ராம்குமார் யாதவ் பணியாற்றி வந்தார். அப்போது மாநிலத்தில் துணை ஆணையர் பதவிக்கான தேர்வு நடந்தது. ராம்குமார் யாதவின் மகன் பாரத் யாதவ் துணை ஆணையர் பதவிக்கான தேர்வை எழுதினார்....
கர்நாடக மாநில தர்மஸ்தலம் தேவஸ்தானத்தில் 500 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பேட்டி
திருமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணாநேற்று திருப்பதி கோயிலுக்கு வெளியே கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலம் கோயிலில் 1980 முதல் 500 இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கோயில் வளாகத்திலேயே புதைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதன் காரணமாக உடனடியாக இது குறித்து விசாரணை...
நாட்டிலேயே அதிகம் ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.50,000
மும்பை: ஐசிஐசிஐ வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெருநகரங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் ஆகஸ்ட் 1ம் தேதி மற்றும் அதன் பின்னர் சேமிப்பு கணக்கு தொடங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் மாதாந்திர சராசரி குறைந்தபட்சம் இருப்பாக 50,000 ரூபாயை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.அதேபோல சிறு நகரங்களில் மினிமம் பேலன்ஸ் 5,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய்...
பதிவு செய்யும் வழக்கறிஞர்களிடம் பார் கவுன்சில்கள் விருப்ப கட்டணம் வசூலிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: வழக்கறிஞர்களாக சட்ட பட்டதாரிகளை பதிவு செய்யும் மாநில கவுன்சில்கள், விருப்ப கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா மாநில பார் கவுன்சில் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி கிரண்பாபு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்து
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் புருலியா நோக்கி நேற்று அதிகாலை சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. சண்டில் ரயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டது. அப்போது அதன் பெட்டிகள் சிதறி பக்கத்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன....
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் பலி: மேலும் 2 பேர் காயம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்தகவல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி தொடங்கிய இந்த தேடுதல் வேட்டை 9வது...
தமிழ்நாட்டை போல கர்நாடகாவிலும் இருமொழி கல்வி மட்டுமே அவசியம்: மாநில அரசுக்கு கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சீரான கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், தற்போதுள்ள மும்மொழி கல்வி கொள்கைக்கு பதிலாக இருமொழி கல்வி கொள்கை செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடக கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை மட்டும் தான் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்...