சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைப்பு
சென்னை: சென்னை ஹையாத் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கவிருந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹையாத் நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் பாதுக்காப்பாக உள்ளனர். வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெறும் தேதி பின்னர்...
இந்தியாவில் யுபிஐ மூலம் ஒரே நாளில் ரூ.70.7 கோடி பண பரிவர்த்தனை
இந்தியாவில் யுபிஐ மூலம் கடந்த 2ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யுபிஐ பயன்பாடு புதிய சாதனையை எட்டியுள்ளது. ...
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு..!
சென்னை: கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29-ம் தேதி வரை http://www.drbkpm.in இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...
ஒடிசாவில் இரவு நேரங்களில் வணிக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதி
ஒடிசாவில் இரவு நேரங்களில் வணிக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இரவு நேர பணியில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும் என் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ...
சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதியில் தீ விபத்து
சென்னை: சென்னை தேனாம்பேட்டை ஐந்து நட்சத்திர விடுதியின் ஒன்பதாவது தளத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக பிடித்த தீயை தேனாம்பேட்டை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். ...
மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை
கோவை: மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரில் விசாரிக்க சென்ற எஸ்.ஐ சண்முகசந்தரத்தை எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் பணியாற்றும் 2 பேர் வெட்டி கொலை செய்தனர். தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ...
தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ...
ஆகஸ்ட்-06 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்
வங்கதேசம்: வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று வங்கதேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என முகமது யூனுஸ் அறிவிருத்திருந்த நிலையில் மாற்றம் செய்தார். முக்கிய அரசியல் காட்சிகள் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதால் முடிவு...