காரைக்குடியில் காரில் வைத்து பெண் கொலை
சிவகங்கை: காரைக்குடி ஆவுடை பொய்கை அருகே காரில் வைத்து மகேஸ்வரி(35) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நிலம் வாங்க வெளியே செல்வதாக வெளிநாட்டில் உள்ள கணவருக்கு தெரிவித்துவிட்டு சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ...
திருவாரூர் அருகே 10ம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி ஊழியருக்கு 54 ஆண்டுகள் சிறை
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி ஊழியர் லலிதாவுக்கு (35) 54 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.18,000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு
சென்னை : பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது என்று இளையராஜா தரப்பு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இசையமைப்பாளர் அனுமதியின்றி பாடலை வெளியிடுவது அவரது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்று இளையராஜா தெரிவித்துள்ளார். ...
4வது டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
4வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலியா 18.2 ஓவர்களில் 119 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய...
காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
பெங்களூரு : காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. ...
பீகாரில் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு..!!
பீகார்: பீகாரில் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியநிலையில் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ...
எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை :எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பணியை தொடங்கிய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நவ.11ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ...
திருப்புவனத்தில் நாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
சிவகங்கை : சிவகங்கை: திருப்புவனத்தில் நாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாய் கடித்ததால் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
மதுரை : மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ. உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர, மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் கூடுதல் காலம் கோரப்பட்டது....