சுகாதாரத்துறையில் 115 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அருண்ராஜ்!!
சென்னை: சுகாதாரத்துறை சார்பில் 115 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ளார். புதிய பொது சுகாதார திட்டம் உருவாக்கப்படுவதுடன், நலம் என்ற பெயரில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், மருத்துவத் துறையை மேம்படுத்தும் வகையில் 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்களும், 2,500 செவிலியர் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ...
ஊழல் பற்றி பொத்தாம் பொதுவாகப் பேசக் கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை
சென்னை: சட்டப்பேரவையில் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், பொத்தாம் பொதுவாக ஊழல் பற்றிப் பேசுவதை அனுமதிக்க முடியாது என்றும், அமைச்சர்கள் ஆதாரத்துடன் ஊழல் பற்றி பேச வேண்டும் என்றும் சபாநாயகர் எச்சரித்துள்ளார். மேலும், அவையில் நடைபெற்ற ஊழல் பற்றிய பேச்சுகள் அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து...
பாஜகவில் அதிரடி அமைப்பு மாற்றங்கள்!
பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசன் பாஜக தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்களை பாஜக அறிவித்துள்ளது. ...
பாஜகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றம்: தேசிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசன் நியமனம்
டெல்லி: தேசிய அளவில் கட்சியில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்களை பாஜக மேற்கொண்டுள்ளது. பாஜகவின் அமைப்புப் பொதுச்செயலாளராக பி.எல்.சந்தோஷ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பாஜக தேசிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசன் உள்பட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் ...
நீட் எதிர்ப்பு பைக் பேரணி நாளை உத்தரவு!
நீட் தேர்வுக்கு எதிராக தி.க. சார்பில் நடத்தப்பட உள்ள பைக் பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, தி.க. துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ...
பல இடங்களில் பட்டா வழங்கவில்லை.. பிரேமலதா!
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாக்கள் வழங்கப்படவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டினார். மேலும், மழைநீர் வடிகால் பிரச்சினைகளும் இன்னும் சரிசெய்யப்படவில்லை என சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ...
பல்லடம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது!
திருப்பூர்: பல்லடம் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உடற்கல்வி ஆசிரியர் சரவணன் மீது வீரபாண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஆசிரியர் சரவணனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ...
இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்த 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!
இலங்கை: மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில், இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகளை பதுக்கி வைத்த தோப்பின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். ...
தஞ்சையில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது
தஞ்சை: தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரும், மாணவியிடம் செல்போனில் பேச உடந்தையாக இருந்த ஆசிரியை திவ்யா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...