பாமக இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு!
சேலம்; சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருள் எம்.எல்.ஏ-வை தாக்கிய சம்பவத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், ராமதாஸ் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ...
ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. கம்சத்கா பகுதியில் அதிகாலை 4.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சத்கா பகுதியில் ஏற்கனவே பல முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ...
அமெரிக்காவில் விர்ஜினியா துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்வு
வாஷிங்டன்: அமெரிக்காவில் விர்ஜினியா துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கஸ்லா ஹாஸ்மி வெற்றி பெற்றார். விர்ஜினியா துணை நிலை ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் ரெய்டை கஸ்லா ஹாஸ்மி தோற்கடித்தார். ...
சட்டப்பேரவையில் காலி இடம் 3 ஆக உயர்வு
சென்னை: மனோஜ் பாண்டியன் ராஜினாமாவை அடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலி இடங்கள் 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவால் 2 இடங்கள் காலியாக உள்ளன ...
அமெரிக்காவின் லூயிஸ்வில் நகரில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் லூயிஸ்வில் விமான நிலையம் அருகே சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் உயிரிழந்தனர். UPS ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம், லூயிஸ்வில் விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
நவம்பர்-05: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
செங்குன்றம் அருகே ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கி விபத்து
திருவள்ளூர்: சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே கோனிமேடு பகுதியில் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கி விபத்துகுள்ளானது: விபத்தில் காயமடைந்த 36 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 பேர் கைது..!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிந்த சாலை பணிக்கு தொகையை விடுவிக்க ரூ.1.2 லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் பிரிவில் மூத்த வரைவு அலுவலர் வீரசேகரன், இளநிலை வரைவு அலுவலர் நாகலிங்கம், உதவியாளர் அருண் ஆகியோர் கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை ...
கடலூர் அருகே காவலர்கள் மது போதையில் கார் ஓட்டி விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
கடலூர்: கடலூர் அருகே சிறப்பு எஸ்ஐ ஓட்டிய கார் சாலையோரம் நின்றிருந்த கட்டிட தொழிலாளர்கள் மீது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி காவல் நிலையத்தை சேர்ந்த 2 காவலர்களையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். ...