வாக்குத் திருட்டால் ஹரியானா தேர்தல் முடிவு மாறியது: ராகுல் காந்தி
டெல்லி: ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானாவில் வழக்கத்துக்கு மாறாக தபால் ஓட்டுகள் அனைத்துமே வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளுக்கு எதிராக இருந்தன. அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா...
டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் - மாதம்பட்டி ரங்கராஜ்
சென்னை: மிரட்டலின்பேரில் ஜாய் கிறிசில்டாவை 2வது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்தார். மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்வேன். டி.என்.ஏ. சோதனை மூலம் குழந்தை என்னுடையது என்று நிரூபித்தால் கவனித்துக் கொள்வேன். மகளிர் ஆணைய விசாரணையின்போது ஜாய் கிறிசில்டா மாதம்...
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில்...
திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
திருப்பூர்: திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி மலையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் இரும்பு பாலம் சேதமடைந்தது. பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் இரும்பு பாலம் சரிசெய்யப்பட்ட நிலையில் 12 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ...
இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தி போட்டிக்கான காங்கேயன் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து 14வது ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டியை நடத்துகின்றன. இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நவ.28 முதல் டிச.10 வரை...
மிர்சாப்பூரில் ரயில் மோதி 5 பக்தர்கள் உயிரிழப்பு
லக்னோ: உத்தரப்பிரதே மாநிலம் மிர்சாப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பக்தர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். சுனார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பக்தர்கள் மீது பயணிகள் ரயில் மோதியது. ஹவுராவில் இருந்து கல்கா சென்றுகொண்டிருந்த கல்கா விரைவு ரயில், பக்தர்கள் மீது மோதியது. கங்கை நதியில் புனித நீராடுவதற்காக சுனார் ரயில்...
அமெரிக்க பொருட்களுக்கான 24% கூடுதல் வரியை ஓர் ஆண்டுக்கு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சீனா அறிவிப்பு
பெய்ஜிங்: அமெரிக்க பொருட்களுக்கான 24% கூடுதல் வரியை ஓர் ஆண்டுக்கு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கா பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த 10% வரி தொடரும் எனவும் சீனா அறிவித்துள்ளது. தென் கொரியாவில் டிரம்ப் - ஸி ஜின்பிங் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீனா இவ்வாறு அறிவித்துள்ளது. ...
கரூர் நெரிசல் - போலீசாரிடம் சிபிஐ விசாரணை
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.வேலுச்சாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 19 போலீசாரிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் ...
கடலூர் ஆவினங்குடியில் 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் சஸ்பெண்ட்
கடலூர்: கடலூர் ஆவினங்குடியில் 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், காவலர் இமான் உசேன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். மதுபோதையில் காரை ஓட்டி சாலையில் நின்றிருந்த 4 பேர் மீது ஏற்றியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ...