தமிழ்நாட்டில் வரையாடுகள் எண்ணிக்கை கடந்ட ஆண்டை விட 21% அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரையாடுகள் எண்ணிக்கை கடந்ட ஆண்டை விட 21% அதிகரித்துள்ளது. தாய், குட்டிகள் இரண்டையும் காணும் வகையில் கணக்கெடுப்பு ஏப்ரலில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் தெரிவித்துள்ளது. ...

புதுவலிமையை பெற்றேன் இன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By MuthuKumar
16 hours ago

சென்னை: உடல்நிலை காரணமாக தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, இன்று புது வலிமையைப் பெற்றேன். நலம் விசாரித்து அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். ...

ஆணவப் படுகொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது: ஐகோர்ட் கிளை

By MuthuKumar
17 hours ago

மதுரை: ஆணவப் படுகொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கவின் ஆணவ படுகொலை வழக்கை நீதிபதி கண்காணிப்பில் நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை முறையாக நடைபெறுவதால் மேற்கொண்டு எந்த விசாரணையும் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிபிசிஐடி 8 வாரத்தில் இறுதி...

பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்

By MuthuKumar
17 hours ago

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ராமதாஸை யாரெல்லாம் சந்திக்கின்றனர் என சிசிடிவியை ஹேக் செய்து கண்காணித்ததாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. உமாதேவியிடம் ராமதாஸ் சார்பில் புகார்மனு அளிக்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட வைஃபை மோடத்தை டி.எஸ்.பியிடம் ராமதாஸின் நேர்முக உதவியாளர் ஒப்படைத்தார். ...

11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் ஆக.7 முதல் வழங்கப்படும்

By Suresh
17 hours ago

சென்னை: 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் ஆக.7 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் சான்றிதழ் பெறலாம். ...

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

By Suresh
17 hours ago

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டது. முறையீடு தொடர்பாக ஆகஸ்ட் 8ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ...

திருவள்ளூர் சின்னக்காவனம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக விநாயகர் கோயில் இடிப்பு

By MuthuKumar
18 hours ago

திருவள்ளூர்: திருவள்ளூர் சின்னக்காவனம் பகுதியில் புதுவாயல் -சின்னக்காவனம் வரை இரு வழிப்பாதை விரிவாக்கப் பணிக்காக விநாயகர் கோயிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.2 இயந்திரங்கள் உதவியுடன் கோயிலை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், மாற்று இடத்தில் கோயிலை கட்ட இழப்பீடு வழங்கிய பின்பே பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோயிலை...

இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது

By MuthuKumar
18 hours ago

சென்னை: ஐடி பெண் ஊழியர் ஒருவர் தனது நண்பர்களோடு பெசன்ட் நகர் கடற்கரைக்கு இரவில் சென்றபோது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் அளித்த புகாரில் வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் சாய் கிரிதரனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ...

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜர்!!

By Nithya
18 hours ago

டெல்லி: ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜரானார். அமலாக்கத்துறை சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானியிடம் விசாரணைக்கு ஆஜரானார். அனில் அம்பானியின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.   ...

சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By Suresh
19 hours ago

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பில் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார். ...