உத்தரகாசி நிலச்சரிவு: 2வது நாளாக மீட்பு பணி தீவிரம்
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தீவிரமடைந்துள்ளது. இதுவரை சுமார் 600 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப்பணியில் NDRF, SDRF, ITBP மற்றும் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ...
மொகாலியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலி..!!
பஞ்சாப்: மொகாலியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்: ஐகோர்ட் அதிரடி
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அபராதத்தை ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு...
அஜித்குமார் மரண வழக்கு: டி.எஸ்.பி.யிடம் சிபிஐ விசாரணை
சிவகங்கை: மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.யிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. ...
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார்!!
சென்னை: புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது என்றும், அதிமுக கட்சி போகிற போக்கே சரியில்லை என்றும் கார்த்திக் தொண்டைமான் தெரிவித்துள்ளார். ...
கனமழை காரணமாக மேகமலை அருவியில் குளிக்கத் தடை!!
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கனமழை காரணமாக மேகமலை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மேகமலை அருவியில் குளிக்க 2வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!!
ஐதாராபாத்: ஆன்லைன் ரம்மி செயலிக்கு விளம்பரம் கொடுத்த நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத சூதாட்ட செயலியை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரத்தில் நடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியதை அடுத்து ஐதாராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ...
அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. கொலை: ஐ.ஜி. செந்தில்குமார் விளக்கம்
கோவை: உடுமலை அருகே எஸ்.ஐ. சண்முகவேல் கொலை தொடர்பாக ஐ.ஜி. செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்டார். அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனின் தோட்டத்தில் பணிபுரியும் மூர்த்தி, அவரது 2 மகன்களுக்கு போலீஸ் வலைவீசி வருகிறது. எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடுமலைப்பேட்டை அருகே உதவி...
2 ஆயிரம் உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
சென்னை: 2 ஆயிரம் உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்தது. ...