பழனி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!!
பழனி: பழனி அடுத்த புதூர் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனைக்கு இடையூறாக சிசிடிவி வைத்ததால் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். ...
சென்னை- திருச்சி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு..!!
சென்னை: சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. திருச்சிக்கு 68 பயணிகள் உள்பட 73 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட்டபோது கோளாறு ஏற்பட்டது. ...
14 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: 2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வெற்றி...
பாஜகவுக்கு நான் அடிமை இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
சென்னை: பாஜகவுக்கு நான் அடிமை இல்லை; கூட்டணி வேறு; கொள்கை வேறு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குறைகளே கண்டறிய முடியாத அளவுக்கு நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தோம் என்றும் தெரிவித்தார். ...
கேரளாவில் இன்றும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
கோழிக்கோடு: கேரளாவில் இன்றும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.கேரளாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்...
இளநிலை பொறியாளர்கள் உள்பட 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேர்வான 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். உதவி பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளில் இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கைதான 27 பேரில் நாகேந்திரன் உள்பட 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகேந்திரன் உள்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். ...
வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்: முகமது யூனுஸ் அறிவிப்பு
வங்கதேசம்: வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முகமது யூனுஸ் தகவல் தெரிவித்தார். ...
கோயில் விழாவில் மின்கம்பி அறுந்து இளைஞர் பலி..!!
உளுந்தூர்பேட்டை: கோயில் விழாவில் மின்கம்பி அறுந்து விழுந்து செந்தில்குமார் (40) என்பவர் உயிரிழந்துள்ளார். கீழ்புத்தமங்கலம் கிராமத்தில் மாரியம்மன்கோயில் வீதி உலாவின்போது மின் கம்பி அறுந்து விழுந்தது. ...