உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம்: பலி 5ஆக உயர்வு
உத்தராகண்ட்: உத்தரகாசி காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் காணாமல் போன 13 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ...
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை என புகார்..!!
திருப்பூர்: பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் - திருப்பூரைச் சேர்ந்த பிரீத்திக்கு 2024 செப்டம்பர்.15ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பிரீத்தி குடும்பத்தின் சார்பில் 120 சவரன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் தந்துள்ளனர். கணவர் வீட்டாருக்கு இன்னோவா கார் ஒன்றையும்...
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: பிரேமலதா விஜயகாந்த்
சென்னை:ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவந்தால் தேமுதிக வரவேற்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் ஜனவரி 9ல் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். ...
அரியலூர் அருகே பேருந்து மோதி தலைமை காவலர் உயிரிழப்பு..!!
அரியலூர்: அரியலூர் ஆண்டிமடம் அருகே அரசு பேருந்து மோதி தலைமை காவலர் சதீஷ் (32) உயிரிழந்துள்ளார். விபத்தில் இறந்த சதீஷ் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். ...
ஈரோட்டில் சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை!!
ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமையை வன்கொடுமை செய்த வழக்கில் சூர்யா என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூர்யாவுக்கு 20 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம்...
சுர்ஜித்தை காவலில் எடுக்க சிபிசிஐடி கோர்ட்டில் மனு..!!
நெல்லை: சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். கவினை ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகி சுர்ஜித் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார். ...
அண்ணாமலை தவறான தகவலை கூறுகிறார்: அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: ஜல் ஜீவன் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என அண்ணாமலை தவறான தகவலை கூறுகிறார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சந்தேகம் இருந்தால் அண்ணாமலை நேரில் வந்து ஆய்வு செய்யட்டும். அண்ணாமலையின் அறிக்கை மக்களிடையே பீதியை கிளப்புவதாக உள்ளது என அவர் கூறினார். ...
கலைஞர் மீது ஆளுநருக்கு என்ன கோபம்?: சபாநாயகர் கேள்வி
சென்னை: கலைஞர் மீது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். கலைஞர் பெயரில் ஒரு பல்கலை. அமைப்பதை கூட அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். ...
சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார்..!!
சென்னை: சென்னை அண்ணா நகரில் பள்ளியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனியார் பள்ளியில் வழக்கறிஞரின் மகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் தாக்கிய விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...