அண்ணாமலை தவறான தகவலை கூறுகிறார்: அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: ஜல் ஜீவன் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என அண்ணாமலை தவறான தகவலை கூறுகிறார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சந்தேகம் இருந்தால் அண்ணாமலை நேரில் வந்து ஆய்வு செய்யட்டும். அண்ணாமலையின் அறிக்கை மக்களிடையே பீதியை கிளப்புவதாக உள்ளது என அவர் கூறினார். ...
கலைஞர் மீது ஆளுநருக்கு என்ன கோபம்?: சபாநாயகர் கேள்வி
சென்னை: கலைஞர் மீது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். கலைஞர் பெயரில் ஒரு பல்கலை. அமைப்பதை கூட அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். ...
சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார்..!!
சென்னை: சென்னை அண்ணா நகரில் பள்ளியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனியார் பள்ளியில் வழக்கறிஞரின் மகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் தாக்கிய விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
உளுந்தூர்பேட்டை அருகே தம்பியை கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை..!!
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் தம்பியை கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் கமலக்கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்தது. 2016ல் குடும்ப சொத்து பிரிப்பது தொடர்பான தகராறில் தம்பி இளையராஜா மீது கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது. ...
4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!!
சென்னை: அறிக்கை தாக்கல் செய்ய தவறிய 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில் டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 2017 முதல் இதுவரை குள்ளஞ்சாவடி ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு...
கோவை காவல்நிலையத்தில் தற்கொலை: 2 காவலர்கள் மாற்றம்
கோவை: கோவை காவல்நிலையத்தில் ராஜன் என்பவர் தற்கொலை செய்த விவகாரத்தில் 2 காவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியில் இருந்த காவலர் செந்தில், உதவி ஆய்வாளர் நாகராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ...
தஞ்சையில் ரூ.2 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு..!!
தஞ்சை: கண்டியூரில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆக்கிரமிப்பு கட்டடங்களை அதிகாரிகள் அகற்றி நிலங்களை மீட்டனர். ...
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து விவரம் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
சென்னை: பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து விவரம் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக.9க்குள் விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பியான், கோட்டீஸ்வர் சிங் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. ...
தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது . ...