விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி
மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் உள்ள ஓட்டலில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ஜெயராமன், கூடலூரைச் சேர்ந்த மைக்கேல், சுந்தரபாண்டியன் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் சென்றனர். அங்கு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதலில் மைக்கேல் இறங்கினார். அவரை தொடர்ந்து சுந்தரபாண்டியனும் இறங்கியுள்ளார். மூவரும் நீண்ட...
துர்கை சிலை கரைப்பில் கோர விபத்து; ஆற்றில் மூழ்கி 12 இளைஞர்கள் பலி: 3 பேர் உடல் மீட்பு; 9 பேரை தேடும் பணி தீவிரம்
ஆக்ரா: உத்தரப் பிரதேசத்தில் துர்கை சிலை கரைப்பின்போது ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்திலுள்ள கைராகர் பகுதியில் குசியாப்பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள உத்தங்கன் ஆற்றில் நேற்று துர்கை சிலைகளைக் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது,...
பயணத் தடையை ஐ.நா விலக்கியதால் தலிபான் அமைச்சர் இந்தியா வருகை: பாகிஸ்தான், சீனாவுக்கு செக் வைக்கும் திட்டமா?
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது, இது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் ஆட்சியை இந்தியா இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், மனிதாபிமான உதவிகள் மற்றும் தொழில்நுட்ப...
பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: இந்திய விமானப்படை தளபதி
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பேட்டி அளித்துள்ளார். சீன தயாரிப்பான F16 மற்றும் JF-17 ரக விமானங்கள், பாகிஸ்தானின் ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டதாக கூறியுள்ளார் ...
சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது மனைவி முறையீடு!!
டெல்லி: லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கின் கைதுக்கு எதிராக அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால்,...
பிரதமர் மோடி சிங்கம் போன்றவர்; அதான் ரத்தத்திற்கு ரத்தத்தால் பதிலடி கொடுத்தார்: ஏக்நாத் ஷிண்டே!
மும்பை: பிரதமர் மோடி சிங்கம் போன்றவர். அதான் ரத்தத்திற்கு, ரத்தத்தால் பதிலடி கொடுத்தார் என மராட்டிய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டத்தில், மாநில துணை முதலமைச்சரும், ஷிண்டே அணியின் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று பேசினார். அப்போது அவர், தேசியப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிரொலி மற்றும்...
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய டீசல் தொடர்ந்து அதிகரிப்பு..!!
டெல்லி: இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் அளவு செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றமதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பரில் 10.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதத்தை விட கிட்டத்தட்ட 63 சதவீதமும் 103 சதவீதமும் அதிகமாகும். Reliance Industries...
மைசூரு தசரா பண்டிகை நிறைவு நாள் ஊர்வலம் கோலாகலம்: சாமுண்டீஸ்வரி அம்மன்மீது மலர் தூவி வழிபட்ட பொதுமக்கள்
பெங்களூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளில் சுமார் 10 லட்சம் பேர் அம்மன் ஊர்வலத்தை கண்டு வழிபட்டனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகளில் வாணவேடிக்கையும் யானைகள் ஊர்வலமும் மைசூரு நகரத்தையே கலைக்கட்ட வைத்தது. கர்நாடக மாநிலம் மைசூருவில் மன்னர் ஆட்சி காலம் முதல் நூற்றாண்டுகளாக தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 415ஆம் ஆண்டு தசரா...
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தேவரகட்டு கிராமத்தில் தசரா உற்சவத்தின் விநோத திருவிழாவில் 2 பக்தர்கள் உயிரிழப்பு!
அமராவதி: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தேவரகட்டு கிராமத்தில் தசரா உற்சவத்தின் போது ஒருவரை ஒருவர் தடியால் அடித்துக் கொள்ளும் விநோத திருவிழாவில் ஏற்பட்ட தடியடியில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 கிராம மக்கள் ஒரு பிரிவாகவும், 7 கிராம மக்கள் மற்றொரு பிரிவாகவும் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்....