கர்நாடகாவில் ஓடும் ரயிலில் இருந்து பிரிந்த 6 பெட்டிகள்
பெங்களூரு: ஷிவமொக்காவிலிருந்து மைசூருவிற்கு சென்ற ரயிலின் 6 பெட்டிகள் தனியாக பிரிந்தபோதிலும், பெரிய விபத்து எதுவும் ஏற்படாததால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஷிவமொக்கா - மைசூரு ரயில் (16205), ஷிவமொக்காவிலிருந்து தினமும் மாலை 4.50 மணிக்கு கிளம்பி இரவு 10.30 மணிக்கு மைசூரு சென்றடையும். நேற்று மாலை வழக்கம்போல ஷிவமொக்காவிலிருந்து கிளம்பிய ரயில் (16205), ஷிவமொக்காவில்...
பீகாரில் மீண்டும் சர்ச்சை டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்
சமஸ்திப்பூர்: பீகாரின் சமஸ்திபூர் மாவட்டம்,ஹசன்பூர் என்ற கிராமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி ஆன்லைனில் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர் டொனால்ட் டிரம்ப் என்று குறிப்பிட்டு புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. அவருடைய பெற்றோர் பெயர்களில் தந்தை பெடரிக் கிறிஸ்ட் டிரம்ப் மற்றும் தாய் மேரி ஆனி...
குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை: குறுகியகாலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட கொள்கை முடிவுகளை எடுக்கிறது. பண வீக்கம் குறைந்ததால், கடந்த ஜூன் மாதத்தில் ரெப்போ வட்டி அரை...
உத்தரகாண்ட் வௌ்ளத்தில் சிக்கி தவித்த 150 பேர் மீட்பு: மீட்பு பணிகள் தீவிரம்
உத்தரகாசி: இமயமலை தொடரில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நேற்று முன்தினம் திடீரென மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததில், ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கை ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேறும், சகதியுமாக பாய்ந்து வந்த காட்டாற்று வௌ்ளம் தாராலி கிராமத்தை சூறையாடியது. அங்குள்ள வீடுகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளும், மரங்கள், வாகனங்களும் அடித்து...
குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் என்ஜினை இணைக்கும் போது திடீர் தீ
திருவனந்தபுரம்: குருவாயூர்-மதுரை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தி அதிகாலை 5.50 மணிக்கு குருவாயூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரையை அடையும். புனலூர் வழியாக செல்லும் ரயில்களில் கூடுதலாக ஒரு என்ஜின் இணைக்கப்படுவது வழக்கமாகும். இது பங்கர் என்ஜின் என்று அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல...
சிபிஎஸ்இ பள்ளி பொது தேர்வுக்கு 75% வருகைப் பதிவு கட்டாயம்: தேர்வு கட்டுப்பாடு அதிகாரி தகவல்
புது டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் பொது தேர்வு எழுத 75 % வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அதிகாரி சன்யாம் பரத்வாஜ் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், எதிர் வரும் பொது தேர்வை எழுதும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 % வருகைப்பதிவு கட்டாயம். மேலும்...
அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில் சீனா செல்கிறார் பிரதமர் மோடி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரிக்கு மேல் வரி விதித்து வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாத இறுதியில் பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார். பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக வரும் 29ம் தேதி ஜப்பான் செல்கிறார். அங்கிருந்து அவர், வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி தியான்ஜின்...
ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்கண்ட் நீதிமன்றம்
சைபாசா: கடந்த 2018ம் ஆண்டு ஜார்க்கண்டின் சாய்பாசாவில் நடந்த பேரணியின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பிரதாப் குமார் என்பவர் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கானது ராஞ்சியில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு சாய்சாசாவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில்.சாய்பாசா...
உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க முடியாது: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்
புதுடெல்லி: ‘உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விவகாரம் என்பதால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது’ என மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக கூறி உள்ளார். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென கடந்த மாதம்...