இந்திய பணக்காரர்கள் பட்டியல் மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி
மும்பை: 2025ம் ஆண்டிற்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 2025ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஹுருன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அவர்கள் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 9.55 லட்சம் கோடி ரூபாய்...
2023ம் ஆண்டு நடந்த ரயில் விபத்துகளில் 21,803 பேர் உயிரிழப்பு: கடந்த 10 ஆண்டுகளில் 2.6 லட்சம் பேர் பலி
சென்னை: 2023ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளில் 21,803 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 24,678 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இது 2022ம் ஆண்டை விட 6.7 % அதிகம். இந்த விபத்துகளில் 3,014 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில்...
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவு
இஸ்தான்புல்: துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இஸ்தான்புல் நகரில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ...
இம்மாத இறுதியில் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்கும்: வெளியுறவுத்துறை அறிவிப்பு
டெல்லி: இம்மாத இறுதியில் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்கும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இருதரப்பு உறவு, இருநாட்டு மக்களிடையே தொடர்பை வலுப்படுத்த விமான சேவை உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா அதிகாரிகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு பிறகு விமான சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு ...
திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் நிறைவு; தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மற்றும் இரவில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வலம் வந்து...
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைந்து நலம்பெற விழைகிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை : காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...
ஆர்.எஸ்.எஸ். இயக்க நூற்றாண்டு நாணயம் வெளியிட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்
திருவனந்தபுரம் : ஆர்.எஸ்.எஸ். இயக்க நூற்றாண்டு நாணயம் வெளியிட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்க நினைவு நாணயத்தை வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும் என்றும் விடுதலை போராட்டத்திலிருந்து விலகிய ஒரு அமைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும் பினராயி கண்டனம் தெரிவித்துள்ளார். ...
24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்களைத் திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது மராட்டிய அரசு!!
மும்பை :24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்களைத் திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது மராட்டிய அரசு. இரவில் கடைகளைத் திறந்து வைப்பவர்களுக்கு காவல்துறையினர் தொல்லை தருவதாக கடைக்காரர்கள் புகார் அளித்துள்ளனர். கடைக்காரர்களின் புகாரை அடுத்து 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்களை திறந்து வைக்க அனுமதி தந்தது அரசு. மதுபானக் கடைகள், மதுக்குடிப்பகங்கள் இரவு முழுவதும்...
குஜராத் அருகே ராணுவ உள்கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் : ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்!!
காந்தி நகர் : குஜராத் எல்லையோரம் உள்ள 'சர் கிரிக்' சர்வதேச எல்லைக்கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்புத் தகவல் அளித்துள்ளார். பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடியை கொடுக்கும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...