5 ஆண்டுகளுக்கு பின் சீனாவுக்கு அக்.26ல் நேரடி விமான சேவை
புதுடெல்லி: கல்வான் தாக்குதலுக்கு பின்னர் 5 ஆண்டுகள் கழித்து இந்தியா, சீனா இடையே நேரடி விமான சேவை அக்.26ல் தொடங்க உள்ளது. கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவிற்கு அக்டோபர் 26 முதல் விமானங்களை மீண்டும் இயக்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. ...
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி
புதுடெல்லி: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2024 செப்டம்பரில் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த உள்நாட்டு வருவாய் 6.8 சதவீதம் அதிகரித்து ரூ.1.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, ...
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: கோதுமை கொள்முதல் விலை ரூ.2,585ஆக உயர்வு; 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க அனுமதி
புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வை...
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்று இந்தியாவிலும் குழப்பம் ஏற்படுத்த சதி: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு
நாக்பூர்: ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் நாக்பூரில் வருடாந்திர விஜயதசமி பேரணி நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தனது உரையில் கூறியதாவது: நமது அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், சமீபத்தில் நேபாளத்தில் பொதுமக்களின் கோபத்தின் காரணமாக வன்முறை ஏற்பட்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது கவலை அளிக்கிறது. இத்தகைய...
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை 12 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரதமர் ஷெபாஸ்ஷெரீப்புக்கு எதிராகவும் ஜம்மு காஷ்மீர் அவாமி செயல் குழுவின் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல இடங்களில் பயங்கர வன்முறை ஏற்பட்டு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 போலீசார் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் 172 போலீசார்...
சீனா போல சர்வாதிகார ஆட்சி நடத்த முடியாது இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது ஒட்டுமொத்த தாக்குதல் நடக்கிறது: கொலம்பியா பல்கலையில் ராகுல் காந்தி பேச்சு
புதுடெல்லி: இந்தியாவில் தற்போது ஜனநாயக அமைப்பின் மீது ஒட்டுமொத்த தாக்குதல் நடந்து வருவதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசி உள்ளார். தென் அமெரிக்காவில் 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கொலம்பியா நாட்டின் மெடலினியில் உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: அண்டை...
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதியில் பிரமோற்சவம் நிறைவு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மற்றும் இரவில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வலம்...
குஜராத் கட்ச் பகுதி அருகே திடீர் ஆக்கிரமிப்பு பாக்.கிற்கு வலுவான பதிலடி தரப்படும்: இந்தியா கடும் எச்சரிக்கை
பூஜ்: பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு தவறுக்கும் வலுவான தீர்க்கமான பதிலடி தரப்படும் என ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் பதிலடியால் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாள் போர் நடந்தது. தற்போது இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கும் சர் கிரீக் செக்டாரில்...
இறந்த வாக்காளர்களை நீக்க அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்தம்
புதுடெல்லி: பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது இறுதி பட்டியலில் 7.24 கோடி பேர் உள்ளனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பற்றிய விவரங்களை அறிய இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் தகவல் பெற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இறந்ததாக குறிப்பிட்டவர்களின்...