அந்தமான் கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி: நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டிருந்தது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.24 வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வு மண்டலமாக...
எஸ்.ஐ.ஆர். குழப்பமான நடவடிக்கையாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம்..!!
கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முறையாக திட்டமிடப்படாத குழப்பமான நடவடிக்கையாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்து உள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிச்சுமை, போதிய பயிற்சியைன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்களால் இந்த பணியில் ஈடுபட முடியவில்லை என வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு...
பெங்களூருவில் வங்கி பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ரூ.5.30 கோடி சித்தூரில் மீட்பு
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் வங்கி பணம் ரூ.7 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.5.30 கோடி சித்தூரில் மீட்பு என தகவல் தெரிவித்துள்ளனர். வங்கி பணம் கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னையில் ஒரு நபர் கைது செய்துள்ளனர். ATM-க்கு பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், கான்ஸ்டபிள் இணைந்து கொள்ளை...
வங்கதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது
டாக்கா: வங்கதேசத்தில் காலை 10 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்கதேசம் தலைநகர் டாக்காவை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.7ஆக பதிவாகியுள்ளது. வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் கொல்கத்தாவிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் நிலநடுக்கம்...
கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பலத்த நிலநடுக்கம்
கொல்கத்தா: கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பகுதிகளில் காலை 10:10 பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. வங்கதேசத்தின் டாக்காவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வடகிழக்கு மற்றும் கொல்கத்தா முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ...
அமைச்சர் பங்களாவுக்குள் சுற்றிய சிறுத்தை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமைச்சரின் பங்களாவுக்குள் சிறுத்தை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் நீர்வளத்துறை அமைச்சர் சுரேஷ்சிங் ராவத் பங்களாவுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறை பிடித்தது. ...
உலகின் 100 சிறந்த வங்கிகள் பட்டியலில் மேலும் சில இந்திய வங்கிகளுக்கு இடம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை
புதுடெல்லி: பொருளாதார விரிவாக்கம் வளர்ச்சியின் வேகத்தை கருத்தில் கொண்டு உலகின் முதல் 100 வங்கிகள் பட்டியலில் மேலும் சில இந்திய வங்கிகள் மற்றும் கடன் வழங்குனர்கள் இடம் பெறுவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லி பொருளாதார பள்ளியில் விகேஆர்வி.ராவ் நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய்...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு சிபிஐ கோர்ட்டில் ஜெகன்மோகன் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆஜர்
திருமலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி நேற்று சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆஜரானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பதவியை இழந்த ஜெகன்மோகன்ரெட்டி கர்நாடக மாநிலம்...
தெற்கு நேபாளத்தில் கம்யூ.- ஜென் ஜி மோதல்
காத்மாண்டு: தெற்கு நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎன்-யுஎம்எல்) மற்றும் ஜென் ஜி இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று பாரா மாவட்டம், சிமாரா சவுக் என்ற இடத்தில் ஜென் ஜி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்...