பாக். எல்லை பகுதி பாதுகாப்புக்கு ஏகே-630 துப்பாக்கிகள்: இந்திய ராணுவம் டெண்டர் வெளியீடு
புதுடெல்லி: சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டின் வான் பாதுகாப்புக்காக வரும் 2035க்குள் சுதர்சன் சக்ரா திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.இந்தத் திட்டமானது சுயசார்பு இந்தியா” என்ற கொள்கையின் கீழ், இந்தியா தனது சொந்த வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க உதவும். எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க இஸ்ரேலில் உள்ள அயர்ன்டோமை போன்ற பல...
ராஜஸ்தான் பாரில் 20% பசு வரி அறிமுகம்: சமூக வலைதளங்களில் வைரல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் ஒருவர் கடந்த 30ம் தேதி ஜோத்பூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் உள்ள பாரில் 6 பீர் அருந்தியுள்ளார். பீர் மற்றும் சைட் டிஷ்சுக்கு ரூ.2650 ஆகியுள்ளது. அதை தவிர ஜிஎஸ்டி, மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் பசு வரி...
அக்.8,9ம் தேதிகளில் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகிறார்: மும்பையில் மோடியுடன் பேச்சு
புதுடெல்லி: பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் அடுத்த வாரம் இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இங்கிலாந்து பிரதமராக ஸ்டார்மர் பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த ஜூலை மாதம் லண்டன் சென்ற பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்த பயணத்தை அவர்...
அலை மோதும் கூட்டம் திருப்பதியில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருமலை: புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். அதில் புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரசித்தி பெற்றவை. புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையொட்டி நேற்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏழுமலையானை தரிசனம் செய்ய அதிக...
மகாராஷ்டிராவை போல் பீகாரிலும் ஒரே கட்டமாக தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் கோரிக்கை
புதுடெல்லி: மகாராஷ்டிராவைப் போல் பீகார் சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் முடிகிறது. இதனால் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை...
வெளிநாட்டு பெண்களுடன் ஜாலி மனைவியை கொன்ற இன்ஜினியர் ஈரான் நாட்டு காதலியுடன் கைது: 50 அடி பள்ளத்தில் வீசிய சடலம் மீட்பு
திருவனந்தபுரம்: மனைவியை கொன்று 50 அடி பள்ளத்தாக்கில் உடலை வீசிய சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது ஈரான் நாட்டு காதலியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூர் அருகே உள்ள காணக்காரி பகுதியை சேர்ந்தவர் சாம் ஜார்ஜ் (59). இவரது மனைவி ஜெஸி சாம் (49). இவர்களுக்கு 28 வயதில் ஒரு...
30 கிலோ தங்கம் மாயமான விவகாரம் சபரிமலை தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்றவரிடம் விசாரணை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் தொடர்பாக தகடுகளை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தியிடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று 6 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 1998ம் ஆண்டு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த...
ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் ரூ.25 கோடி பெறும் அதிர்ஷ்டசாலி யார்? கொச்சியில் விற்பனையான டிக்கெட்டுக்கு ஜாக்பாட்
திருவனந்தபுரம்: கேரள அரசு சார்பில் இவ்வருடம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ. 25 கோடிக்கான பம்பர் லாட்டரி கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. மொத்தம் 75 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டதாகவும், இவை அனைத்தும் விற்றுவிட்டதாகவும் லாட்டரித் துறை இயக்குனரகம் தெரிவித்தது. இந்நிலையில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில்...
பாக்.குக்கு ரஷ்யா போர் விமான இன்ஜின் பிரதமர் மோடியின் ராஜதந்திரங்கள் தோல்வி: காங். விமர்சனம்
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஒருகாலத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான நட்பு நாடான ரஷ்யா, தற்போது இந்தியாவின் வேண்டுகோளை பறக்கணித்து பாகிஸ்தானின் ஜேஎப்-17 போர் விமானங்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆர்டி-93எம்ஏ இன்ஜின்களை வழங்குவதை தொடர முடிவு செய்திருக்கிறது. ஜேஎப்-17 விமானங்கள் சீனா உருவாக்கியவை. இந்த விமானங்களுக்கு ஆர்டி-93எம்ஏ இன்ஜின்கள்...