பாக்.குக்கு ரஷ்யா போர் விமான இன்ஜின் பிரதமர் மோடியின் ராஜதந்திரங்கள் தோல்வி: காங். விமர்சனம்
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஒருகாலத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான நட்பு நாடான ரஷ்யா, தற்போது இந்தியாவின் வேண்டுகோளை பறக்கணித்து பாகிஸ்தானின் ஜேஎப்-17 போர் விமானங்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆர்டி-93எம்ஏ இன்ஜின்களை வழங்குவதை தொடர முடிவு செய்திருக்கிறது. ஜேஎப்-17 விமானங்கள் சீனா உருவாக்கியவை. இந்த விமானங்களுக்கு ஆர்டி-93எம்ஏ இன்ஜின்கள்...
மும்பை தாக்குதல் விவகாரம் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு காங்கிரஸ் அரசு பணிந்தது ஏன்? சோனியா, ராகுல்காந்திக்கு பா.ஜ கேள்வி
புதுடெல்லி: மும்பை தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்தது ஏன் என்று சோனியா, ராகுல்காந்திக்கு பா.ஜ கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மறைந்த மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்து வந்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த...
துர்கா பூஜையில் திடீர் பரபரப்பு; நடிகை கஜோலிடம் பாதுகாவலர் அத்துமீறல் : பாலிவுட்டில் பரபரப்பு
மும்பை: நடிகை கஜோல் கால் தடுமாறியபோது அவரை பாதுகாவலர் பிடித்த விதம் இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரபல பாலிவுட் மற்றும் தமிழ் நடிகை கஜோல், மும்பையில் தனது குடும்பத்தினருடன் ஆண்டுதோறும் நடைபெறும் துர்கா பூஜை கொண்டாட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப்...
போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கொடூரன்; மீண்டும் 7 வயது சிறுமியை சீரழித்து கொடூர கொலை: பாலியல் வழக்கில் அலட்சியத்தால் நடந்த அவலம்
பிவண்டி: பாலியல் கொலை வழக்கில் கைதாகி காவல்துறை பிடியிலிருந்து தப்பிய கொடூரன், இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 7 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் கடந்த 2023ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான நபர், இரண்டு...
கர்நாடகாவில் மீண்டும் முதல்வர் சர்ச்சை; ‘அதிகாரம் நிச்சயம் என்னைத் தேடி வரும்’: கர்நாடக துணை முதல்வர் பேச்சால் பரபரப்பு
பெங்களூரு: ‘அதிகாரம் நிச்சயம் என்னைத் தேடி வரும்’ என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளது, அம்மாநில அரசியலில் மீண்டும் முதல்வர் மாற்றம் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பாக மறைமுகப் பனிப்போர் நிலவி வருகிறது. முதல்...
மனைவியை கழுத்தை நெரித்து கொன்று உடல் பள்ளத்தாக்கில் வீச்சு: காதலியுடன் இன்ஜினியர் கைது
திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொன்று 50 அடி பள்ளத்தாக்கில் உடலை வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது ஈரான் நாட்டு காதலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூர் அருகே உள்ள காணக்காரி என்ற பகுதியை சேர்ந்தவர் சாம் ஜார்ஜ் (59)....
காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமி கூட்டுபலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது
சித்தூர்: சித்தூர் அருகே பூங்காவில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் ெசய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சித்தூர் அருகே உள்ள ஒரு பூங்காவில் கடந்த 25ம் தேதி 16வயது சிறுமியும், அவரது காதலனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், தாங்கள் வனத்துறை போலீசார் என்றும்,...
மத உணர்வுகளுக்கு முன்னுரிமை புகார்; விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 11 உயிர் உரங்களுக்கு தடை: ஒன்றிய அரசின் முடிவுக்கு கண்டனம்
புதுடெல்லி: விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 11 உயிர் உரங்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 11 உயிர் உரங்களுக்கான ஒப்புதலை ஒன்றிய வேளாண் அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. கோழி இறகுகள், பன்றி மற்றும் மாடுகளின் திசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உரங்கள், பயிர்களில் பயன்படுத்தப்படுவதற்கு இந்து...
தசரா பண்டிகையை முன்னிட்டு ராமர் வேடத்தில் ராகுல் காந்தி போஸ்டர்: உத்தரபிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் மோதல்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியை ராமனாக சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள தசரா போஸ்டர், இரு கட்சிகளுக்கும் இடையே புதிய மோதலை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே, தசரா பண்டிகையை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின்...