கட்டணம் வசூலிக்கும் கருவி பழுதானால் டோல்கேட்டில் இலவசமாக பயணிக்க அனுமதி: நவம்பர் 15ம் தேதி முதல் அமல்
புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் கருவிகள் பழுதடைந்தால் கட்டணமின்றி பயணிக்கலாம், ஃபாஸ்டேக் அபராதமும் குறைப்பு என வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய நிவாரணங்களை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ பயன்பாட்டை ஒன்றிய அரசு தீவிரமாக ஊக்குவித்ததன் விளைவாக, தற்போது அதன் பயன்பாடு 98 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் பெருமளவில்...
பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி
ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பரூக் அப்துல்லா தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ...
புதிய குற்றவியல் சட்டங்களின்படி 2026 முதல் எப்ஐஆருக்கு 3 ஆண்டுக்குள் தீர்வு: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தகவல்
டெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம், பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து வைக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருமலை: புரட்டாசி 3ம் சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் தரிசனம் செய்து...
லஞ்சம், விபத்து புகாரில் சிக்கிய 2 நீதிபதிகள் பணிநீக்கம்: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி
மும்பை: கடுமையான முறைகேடு புகார்களின் அடிப்படையில் இரண்டு கீழ் நீதிமன்ற நீதிபதிகளை மும்பை உயர்நீதிமன்றம் பணிநீக்கம் செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த தனஞ்செய் நிகாம் என்பவர், மோசடி வழக்கொன்றில் கைதான நபருக்கு ஜாமீன் வழங்க இரண்டு இடைத்தரகர்கள் மூலம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கடந்த 2024ம்...
திருமலையில் விடிய விடிய கனமழை: தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காத்திருப்பு!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள திருமலையில் விடிய விடிய மழை பெய்து வந்தது. புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி சுமார் மூன்று கிலோமீட்டருக்கு ஆக்டோபஸ் கமாண்டோ பாதுகாப்பு படையினர் அலுவலகம் இருக்கும்...
பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் ஆய்வு!
டெல்லி: பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.சந்து ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர். பீகாரில் 2 நாட்கள் நடக்கும் ஆய்வில் அரசியல் கட்சிகள், போலீஸ், நிர்வாக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்...
ட்ரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி வரவேற்பு
டெல்லி: பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை அடைந்து வருவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். ...
வேளாண் பல்கலைக்கழகங்களில் 20% இளங்கலை இடங்கள் இனி அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்: சிவராஜ் சிங் அறிவிப்பு!
டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20% இளங்கலை இடங்கள் இனி CUET-ICAR நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...