பீகார் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார்..!!
பாட்னா: பீகார் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்று கொண்டார். முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ஆஃப்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார். பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்....
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!!
கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக நடை திறந்து 5 நாட்களாகியும் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
குடியரசுத்தலைவர் கேள்வி எழுப்பிய விவகாரம்; ஆளுநர் நீண்டகாலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: குடியரசுத்தலைவர் கேள்வி எழுப்பிய விவகாரம்; ஆளுநர் நீண்டகாலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது . மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சட்டப்பேரவைக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் அதை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஒரு சட்டப்பிரிவுக்கு 2...
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: மசோதா தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்தூர்கர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வாசிக்கிறது....
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
டெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை (21.11.2025) தென் ஆப்பிரிக்கா ஜோஹன்னஸ்பர்க் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாளை முதல் 23ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ஜி-20 உச்சி மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரு நாள் மட்டுமே 80,000 பக்தர்கள் சாமி தரிசனம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரு நாள் மட்டுமே 80,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதிக பக்தர்கள் வருகையால் நேற்று முதல் திங்கள்கிழமை வரை 5,000 பேருக்கு மட்டுமே ஸ்பாட்...
அச்சமற்ற முடிவு எடுக்கும் உத்வேகத்தை பாட்டியிடம் இருந்து பெற்றேன்: ராகுல் காந்தி உருக்கம்
புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திராகாந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள்...
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட அன்மோல் பிஷ்னோயை டெல்லியில் என்ஐஏ கைது: 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட டெல்லி வந்த அன்மோல் பிஷ்னோயை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கி சூடு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையதாக...
பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.7 கோடி கொள்ளை: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை
பெங்களூரு: பெங்களூரு ஜே.பி.நகர் எச்.டி.எப்.சி வங்கிக்கிளையிலிருந்து ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக சிஎம்எஸ் நிறுவன வாகனத்தில் பணம் அனுப்பப்பட்டது. அசோகா பில்லர் அருகே ஒரு கும்பல் இந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியது. இன்னோவா காரில் வந்த 6-7 பேர், தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி வாகனத்தை நிறுத்தியிருக்கின்றனர். ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தில் ஓட்டுநர்,...