போபால் எய்ம்ஸ் ரத்த வங்கியில் ரத்தம், பிளாஸ்மா திருட்டு
போபால்: மத்தியப்பிரதேசத்தின் போபாலில் உலகப் புகழ்பெற்ற எய்ம்ஸ் ரத்த வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரத்த வங்கியில் இருந்து ரத்தம் மற்றும் பிளாஸ்மா அலகுகள் திருடப்படுவதாக ரத்த வங்கியின் பொறுப்பாளர் ஞானேந்திர பிரசாத், பாக் செவானியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நீண்ட காலமாக ரத்த வங்கியில் இருந்து ரத்தம் மற்றும் பிளாஸ்மா உள்ளிட்டவை மாயமாகி வருவதாக...
மூன்றுக்கு மேல் பெற்றால் பதவி காலி அரசு வேலைக்காக குழந்தையை காட்டில் விட்ட பெற்றோர் கைது
சிந்த்வாரா: மத்தியபிரதேசத்தில் பிறந்து 3 நாள்களேயான குழந்தையை காட்டில் விட்டு சென்ற கொடூரம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர் ஒருவருக்கு, சிவில் சர்வீஸ் விதிகளின்படி, ஜனவரி 26 2001க்கு பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர் அரசு பணிக்கு தகுதி அற்றவராகி விடுவார். இந்நிலையில் சிந்த்வரா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பப்லு டான்டோலியா(38), ராஜ்குமார்...
பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி
பூர்னியா: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு ஜோக்தானி தானாபூர் வந்தே பாரத் விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கதிஹார் ஜோக்பானி பிரிவில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தபோது 5 இளைஞர்கள்(14-19 வயதுக்குட்பட்டவர்கள்) ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். வானம் மேகமூட்டம்...
ஆந்திராவில் வினோத திருவிழா 800 அடி உயர மலையில் தடிகளால் அடிக்கும் விழாவில் 2 பேர் பலி: 100 பேர் காயம்
திருமலை: ஆந்திராவில் 800 அடி உயர மலையில் உள்ள மாலா மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடந்த தடியால் அடிக்கும் சம்பிரதாய ஊர்வலத்தில் 2 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹோலசகுண்டா அடுத்த தேவரகட்டுவில் உள்ள 800 அடி உயர மலையில் மாலா மல்லேஸ்வர சுவாமி கோயில்...
தலைமை தேர்தல் கமிஷனர் பீகாரில் இன்று நேரில் ஆய்வு
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் விவேக் ஜோஷி மற்றும் எஸ்.எஸ். சந்து தலைமையிலான முழு ஆணையக் குழு இன்று மற்றும் நாளை...
தவறான ஆராய்ச்சி கட்டுரைக்கு இனிமேல் மைனஸ் மதிப்பெண்: ஒன்றிய அரசு விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்ஐஆர்எப்) உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை எதிர்மறை மதிப்பெண் வழங்கப்பட்டது இல்லை. இந்த நிலையில், பல அளவுருக்களுக்கு எதிர் மறை மதிப்பெண்களை என்ஐஆர்எப் வழங்க உள்ளது. இந்த நிலையில், தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவர் அனில் சஹஸ்கரபுத்தே நேற்று கூறுகையில்,‘‘தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு விரைவில் எதிர்மறை மதிப்பெண்ணை அறிமுகப்படுத்தும். இதில்...
பல்சர் பைக் முன் நின்று போட்டோ இந்திய நிறுவனங்கள் குறித்து ராகுல் பெருமை
புதுடெல்லி: இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுவதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தென் அமெரிக்காவில் நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொலம்பியாவில் இஐஏ பல்கலைக்கழகத்தில் இன்றைய எதிர்காலம் என்ற தலைப்பில் ராகுல் உரையாற்றினார். இந்நிலையில் ராகுல்காந்தி பஜாஜ் நிறுவனத்தின்...
27 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்மல்லையா தானம் சபரிமலையில் 30 கிலோ தங்கம் மாயமா? பரபரப்பு தகவல்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் பணிகளுக்காக 27 வருடங்களுக்கு முன் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30.300 கிலோ தங்கம் மாயமானதாக கூறப்படுவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த முக்கியப் பணிகளை நடத்த வேண்டும் என்றாலும் கேரள உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது. அனைத்துப் பணிகளையும் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில்...
தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் இனி நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம்: பாக்.கிற்கு இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை
புதுடெல்லி: தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் ஆபரேஷன் சிந்தூர் போல இனி நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். குஜராத்தின் ரான் ஆப் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையே சர் க்ரீக் கழிமுக பகுதி உள்ளது. சர்ச்சைக்குரிய இந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவ உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தி...