திருமங்கலத்தில் காதல் விவகாரத்தில் மொபட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவன் படுகொலை
* மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை, 2 பேர் கைது, நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கரம் சென்னை: சென்னை திருமங்கலத்தில் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மொபட்மீது சொகுசு காரை ஏற்றி கல்லூரி மாணவன் படுகொலை செய்யப்பட்டார். இதில் மற்றொரு மாணவன் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சையில் உள்ளார். இதுதொர்பாக, இரண்டு மாணவர்களை...
நெல்லை அருகே ரகளை செய்தவர்களை பிடிக்க சென்ற எஸ்ஐயை வெட்ட முயற்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு: போலீஸ்காரர், வாலிபர் படுகாயம்
பாப்பாக்குடி: நெல்லை அருகே பாப்பாக்குடியில் ரகளையில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற எஸ்ஐயை அரிவாளால் வெட்ட முயற்சித்த வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த ரவுடி, தாக்குதலில் படுகாயமடைந்த வாலிபர் மற்றும் போலீஸ்காரர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி இந்திரா காலனி, சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன்...
ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் சிறைபிடிப்பு 2 படகுகளும் பறிமுதல்: இலங்கை கடற்படை அட்டகாசம்
ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 391 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றன. இரவு தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைபிடித்தனர். அதிலிருந்த மீனவர்கள்...
சிறையிலிருந்து வந்த கணவன் வெறிச்செயல்; நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கூட்டுப்பலாத்காரம்: சேலத்தை சேர்ந்த குற்றவாளி குஜராத்தில் கைது
சூரத்: குஜராத்தில் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த கணவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொடூரமாகத் தாக்கி, கூட்டுப் பலாத்காரம் செய்து, தாபி ஆற்றில் வீசிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த கணேஷ் ராஜ்புத் (35) என்பவர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்...
CRPF காவலரின் மகளுக்கு பாலியல் தொல்லை புகாரில் சக காவலர் கைது
சென்னை: ஆவடியில் CRPF காவலரின் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சக காவலரான சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். CRPF உயரதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர். கராத்தே தெரிந்த அச்சிறுமி சுரேஷ் குமாரை தாக்கி விட்டு, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். புகாரை அடுத்து CRPF வளாகத்திற்குச் சென்ற ஆவடி...
புதுச்சேரியில் ரூ.15 கோடிக்கு விற்க முயன்ற 7 கிலோ திமிங்கல எச்சத்தை போலீசார் பறிமுதல்
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.15 கோடிக்கு விற்க முயன்ற 7 கிலோ திமிங்கல எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திமிங்கல எச்சத்தை வாங்குவது போன்று நடித்து நுண்ணறிவு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திமிங்கல எச்சத்தை விற்க முயன்ற மாயகிருஷ்ணன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ...
திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை செல்லும் பேருந்து பயணியிடம் பணம் திருடிய 4 பெண்கள் கைது
திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை செல்லும் பேருந்து பயணியிடம் பணம் திருடிய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணம் செய்த வேதநாயகி என்பவரிடம் ரூ.7,000 திருடியதாக மாலா, சத்யா, மைதிலி, வைதேகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ...
திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஸ்வாகர்மாவை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா(35) சிறையில் உள்ளார். ...
நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம்
நெல்லை: நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன்-கிருஷ்ணவேணி தம்பதி பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கவின் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்களான எஸ்.ஐ தம்பதியினர் தூண்டுதலால்தான் கவின் கொலை செய்யப்பட்டதாக புகார்...