சென்னையில் குழந்தைகளை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த வித்யா என்ற பெண் கைது..!!
சென்னை: சென்னையில் குழந்தைகளை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த வித்யா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் குழந்தை கடத்துவதாக புழல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் குழந்தை கடத்தலில் உறுதுணையாக செயல்பட்ட வித்யா என்ற பெண்ணை புழல் போலீசார் கைது செய்தனர். வித்யாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த குழந்தையின்...
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது
ஊட்டி: ஊட்டியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். ...
ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் ஜனசேனா கட்சி பெண் நிர்வாகி கணவர் கார் டிரைவரிடம் 4 நாட்கள் விசாரணை
தண்டையார்பேட்டை: ஆந்திர வாலிபர் கொலை வழக்கில், ஜனசேனா கட்சி பெண் நிர்வாகியின் கணவர் மற்றும் கார் டிரைவரிடம் ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சீனிவாசலு ராயுடு. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 12ம்தேதி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் அடித்து கொலை செய்யப்பட்டார். பின்னர்,...
அண்ணன், தம்பி வெட்டிக்கொலை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவில் காமராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன்(35). இவரது தம்பி கார்த்திக்(29). கூலித்தொழிலாளர்கள். இதில் கண்ணனுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. கார்த்திக்குக்கு திருமணமாகவில்லை. இவர்கள் இருவரும் நேற்றிரவு 11 மணி அளவில் அப்பகுதியில் உள்ள அடியார்குளக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாளால் இருவரையும் சரமாரி வெட்டினர்....
மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய ஆர்சிபி வீரர் யஷ் தயால்!
ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கிரிக்கெட் தொடர்பாக உதவுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆர்சிபி வீரர் யஷ் தயால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு 17 வயதில் தொடங்கி கடந்த 2 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. இதற்கு முன் உ.பி.யைச்...
சிதம்பரம் அருகே திருநங்கை கொலை
கடலூர்: கடலூர் அருகே உள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா என்கிற கவியரசன் (40). காவியா நேற்று சிதம்பரம் அருகே பு.முட்லூர் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே கொலை செய்யப்பட்டுள்ளார். கடையின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் காவியாவின் உடல் கண்டடுக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
திருவாரூர் அருகே பயங்கரம் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி கொலை
*கணவன் வெறிச்செயல் மன்னார்குடி : திருவாரூர் அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடபாதிமங்கலம் ஊட்டியானி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(53). இவரது மனைவி செல்வி(50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தொழிலாளியான ரமேஷ், அடிக்கடி மதுஅருந்தி...
திருவாரூர் அருகே பரபரப்பு 9ம் வகுப்பு மாணவரை காரில் கடத்த முயற்சி
*5 பேரை சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைப்பு முத்துப்பேட்டை : திருவாரூர் அருகே 9ம்வகுப்பு மாணவரை காரில் கடத்த முயன்ற 5பேரை பொதுமக்கள் சுற்றிவளைத்து போலீசில் ஒப்படைத்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சௌரிராஜன் (45). மலேசியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி (37). மகன்...
வேலூர் அருகே பரபரப்பு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போர்மென் கைது
*லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை வேலூர் : வேலூர் மாவட்டம், செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன்(67), ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை டிரைவர். இவர் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு விரிஞ்சிபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மேலும் வீட்டின் அருகே மின்கம்பம் நடுவதற்காகவும் ரூ.27,000 ஆன்லைன்...