ஓசூரில் ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு: பெண் உள்பட 3 பேருக்கு வலை
ஓசூர்: ஓசூர் அருகே, ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய வழக்கில் கைதான 4பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் உள்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன்(34). திமுக உறுப்பினரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம், இவரை...
ராமேஸ்வரம் அருகே மதுபோதையில் சமையல் மாஸ்டரை கொலை செய்த 2 பேர் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மதுபோதையில் சமையல் மாஸ்டர் அன்சாரி (60) அடித்து கொன்ற வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ...
திரைப்படம் தயாரித்து நஷ்டமானதால் போதைப்பொருள் விற்பனை செய்தேன்: சிம்புவின் மேனேஜர் வாக்குமூலம்
அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் சுற்று வட்டார பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர போதைப் பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த 19ம் தேதி திருமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பாடி பகுதியை சேர்ந்த தியானேஸ்வரன் (26) என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து...
விழுப்புரம் அருகே போதை மாத்திரைகள், ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர் கைது!
விழுப்புரம்: விழுப்புரம் - சாலமேடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில், விற்பனைக்காக வைத்திருந்த 68 போதை மாத்திரைகள், ஊசி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில் பண்ருட்டி அருகே உள்ள சின்ன இளந்தம்பட்டைச் சேர்ந்த ஜெயகணேஷ் (25) என தெரியவந்துள்ளது. ...
சிதம்பரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நவீன், கவுதம், அருள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி பட்டினமருதூர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்றதாக ராஜா, ஹபீபு ரஹ்மான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ...
அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீசி ரீல்ஸ்: வாலிபர் கைது
நெல்லை: நெல்லை டவுன் கண்டியபேரியில் உழவர்சந்தை அருகே உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கடந்த 20ம் தேதி இரவு மர்ம நபர்கள் இரு பெட்ரோல் குண்டுகளை வீசி வெடிக்கச்செய்தனர். இதை அவர்கள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் ஆக வெளியிட செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு...
வாழப்பாடி அருகே பயங்கரம் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மனைவி கண் முன் நடந்த கொடூரம்; 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
சேலம்: வாழப்பாடி அருகே திமுக கிளைச்செயலாளரை மர்மநபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கரியகோயில் கல்வராயன்மலையில் உள்ள கீழ்நாடு ஊராட்சி கிராங்காடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45), விவசாயி. திமுக கிளைச்செயலாளராக இருந்தார். இவரது மனைவி சரிதா (40). பெத்தநாயக்கன்பாளையம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்....
பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு போலி சிஎஸ்ஆர் வழங்கிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: பரபரப்பு தகவல்கள்
கடலூர்: கடலூர் மாவட்டம், புவனகிரி இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றியவர் லட்சுமி. இவர் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் தொலைந்துபோன பத்திரங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் தொலைந்ததாக பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று போலியான சிஎஸ்ஆர் போட்டதாக புகார் எழுந்தது. சென்னை, திருப்பூர், கடலூர் போன்ற பகுதிகளில் இருந்து சிலர் இங்கு வந்து தங்களது நில...