பாலியல் தொல்லை எஸ்ஐ, 2 போலீசார் அதிரடி டிஸ்மிஸ்
திருச்சி: திருச்சியை சேர்ந்த காதல் ஜோடியான (17வயது சிறுமியும், 19வயது இளைஞரும்) கடந்த 2023 அக்.4ம் தேதி பஸ்சில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு சென்றனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜீயபுரம் போலீசில் பயிற்சி எஸ்ஐயாக பணியாற்றிய சசிக்குமார்(28), தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியாற்றிய சங்கர்ராஜபாண்டி(32), நவல்பட்டு காவல்நிலைய காவலர்...
திருவாரூர் அருகே தகாத உறவில் பிறந்தது ரூ.1.50 லட்சத்திற்கு குழந்தை விற்பனை: கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூனமடை கிராமத்தில் வசித்து வருபவர் முரளி மனைவி சந்தோஷ் குமாரி (30). இவருக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2023ல் உடல் நலக்குறைவு காரணமாக முரளி இறந்துவிட்டார். இதனால் சந்தோஷ் குமாரி கூனமடை கிராமத்தில்தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்,...
திருச்சி அருகே பரபரப்பு புகார் கொடுக்க வந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த எஸ்ஐ
துறையூர்:திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். லாரி டிரைவர். இவரது மனைவி கிருத்திகா(35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிவக்குமார் மற்றும் அவரது பெரியப்பா ஜோதிவேல் வயல்கள் அருகருகே உள்ளது. இருவருக்கும் கிணற்றிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 29ம் தேதி...
மதுரை மாநகராட்சி வரிவசூல் முறைகேடு மேலும் ஒரு ஒப்பந்த ஊழியர் கைது
மதுரை: மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்து பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரிந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இம்முறைகேடு வழக்கை நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்கிறது. இதற்கிடையில் வரி முறைகேடு வழக்கு...
ஒப்பந்ததாரர் பெயரில் போலி பில்கள் தயாரித்து ரூ.21.64 கோடி பணம் மோசடி அதிமுக நிர்வாகிகள் கைது
மதுரை: மதுரை அருகே தனக்கன்குளம், கார்த்திகா நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார். அரசு ஒப்பந்ததாரர். ஒப்பந்த பணிகளுக்கு தேவையான நிதியை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நகரச் செயலாளரும், தற்போதைய விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான சக்திவேல் என்பவரிடம் இருந்து பெற்று வந்துள்ளார். கந்துவட்டிக்கும் பணம் பெற்றதாக தெரிகிறது. மேலும்,...
தூத்துக்குடியில் சகோதரர்கள் கொன்று புதைப்பு: உடலை நாய் கவ்வியதால் சிக்கிய போதை கும்பல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போதை கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பியை அடித்துக் கொன்று புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடல்களும் நேற்று தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி கோயில் பிள்ளை நகர் அருகே பண்டுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரை கடந்த 25ம்தேதி முதல் காணவில்லை என்று அவரது அண்ணன் பொன்ராஜ் அளித்த...
சென்னையில் ஆன்லைன் மோசடியில் போலி வங்கி கணக்கு தொடங்கி சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய தம்பதி கைது
சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஆன்லைன் மோசடியில் போலி வங்கி கணக்கு தொடங்கி சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய தம்பதி கைது செய்யப்பட்டனர். சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாதி திரு.சல்மான் சலீம், ஆ/வ29, த/பெ.அப்தாஸ் சலீம் என்பவர் நடத்திவரும் Travel Management அலுவலகத்தில் Vendor நிறுவனத்தில் இருந்து வந்திருந்த EMail ல் கொடுக்கப்பட்டிருந்த Punjab National...
ஊறுகாய் பாட்டிலில் போதை பொருள்: 3 பேர் கைது
திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் உள்ள நண்பருக்கு கொடுத்து அனுப்பிய ஊறுகாய் பாட்டிலில் எம்டிஎம்ஏ உள்பட போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பக்கத்து வீட்டு வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே சக்கரக்கல் பகுதியை சேர்ந்தவர் மிதிலாஜ். சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த...
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அரும்பாக்கத்தில் விற்பனை; ரவுடி கைது
அண்ணாநகர்: ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் குருவி போல சென்னைக்கு கஞ்சா கடத்தி வருபவர்களை பிடிப்பதற்கு அண்ணாநகர் மேற்கு இணை ஆணையர் திஷா மிட்டல் உத்தரவின்படி மதுவிலக்கு போலீசார் மாறுவேடத்தில் 24 மணி நேரமும் எழும்பூர், சென்ட்ரல், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் பிரபல ரவுடி...