பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கம்பத்தில் கட்டி வைத்து தொழிலாளி கொடூர கொலை: மொட்டையடித்து, கால்வாயில் சடலம் வீச்சு
புழல்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் காட்டுநாயக்கன் நகரை சேர்ந்த பழங்குடியின கூலி தொழிலாளி மணிமாறன் (26). இவர், சாலைகளில் உள்ள பழைய பொருட்களை சேகரித்து, அவற்றை கடையில் விற்று பிழைத்து வந்தார். இந்நிலையில், செங்குன்றம் அடுத்த எல்லையம்மன்பேட்டை - ஆவடி சாலையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு மணிமாறன் பிளாஸ்டிக்...
பெண் மேலாளரின் பெயரில் ரூ.1.75 கோடி நூதன மோசடி: ஜிம் உரிமையாளர் கைது
சென்னை: திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் தனது மனைவி அன்னபூரணியுடன் இணைந்து அண்ணாநகர் உள்பட சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி மையங்கள் நடத்தி வருகிறார். இதில், ஆழ்வார்பேட்டையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் மேலாளராக திருவல்லிக்கேணியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இவரிடம், உரிமையாளர் சீனிவாசன் ஆசைவார்த்தை கூறி அவரது...
காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி கல்லூரி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம்: ரவுடி கைது
சென்னை: தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ராணி (21, பெயர் மாற்றப்பட்டுள்து). கல்லூரி மாணவியான இவர், தினசரி கல்லூரிக்கு செல்லும் போது, அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்துள்ளார். ராணி இதனை பலமுறை கண்டித்தும் விக்னேஷ் தொந்தரவு ெகாடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராணி கல்லூரிக்கு சென்றபோது, மதுபோதையில் பின்...
போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: கொளத்தூர் திருப்பதி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (26). இவர் அல்பிராசோலம் என்ற போதைப்பொருளை வைத்திருப்பதாக ராஜமங்கலம் போலீசாருக்கு கடந்த 2022 ஜூலை 16ம் ேததி தகவல் வந்தது. இதையடுத்து, ரெட்டேரி சந்திப்பு அருகே நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வானத்தில் வந்த ஏழுமலையிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவரிடம் 250...
ஆந்திராவில் ‘ஏஐ’ பயன்படுத்தி கைவரிசை முதல்வர் சந்திரபாபு நாயுடு பெயரில் போலி வீடியோ அழைப்புகள்: தெலுங்கு தேசம் மாவட்ட தலைவர்களிடம் பணம் மோசடி
திருமலை: ஏ.ஐ.தொழில்நுட்பம் (செயற்கை நுண்ணறிவு) நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சர் தேவினேனி உமா ஆகியோர் பேசுவது போல் வீடியோ அழைப்பு செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றி சிலர் மோசடி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 30ம்...
டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் சத்தியமூர்த்தி பவன், ஐடி நிறுவனம் உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு சைபர் க்ரைம் போலீஸ் வலை
சென்னை: காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவன், கவர்னர் மாளிகை, இன்போசிஸ் ஐடி நிறுவனம், தனியார் தொலைக்காட்சி அலுவலகம் உள்பட 7 இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு...
எங்களை விட்டு போய் 8 வருஷம் ஆகுது... மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்க தந்தை பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விஜய் பிரசாரத்தில் பலியான சிறுவனின் தாய் பகீர் குற்றச்சாட்டு
கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் தனது மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்கும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் உயிரிழந்த பிரித்திக் என்ற சிறுவனின் தாய் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம்...
ரேஷன் அரிசியை கடத்தி விற்க விவசாயியை கட்டாயப்படுத்தினர் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் 2 எஸ்ஐ, பெண் ஏட்டு அதிரடி கைது: வலைவிரித்து பிடித்தது விஜிலென்ஸ்
சேலம்: ரேஷன் அரிசியை கடத்தி விற்க விவசாயியை கட்டாயப்படுத்தி ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.க்கள், பெண் ஏட்டு ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவர் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில், சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை...
செங்குன்றத்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்துக்கொலை: 4 பேர் கைது
சென்னை: செங்குன்றத்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திருட முயன்றதாக தொழிலாளி மணிமாறன் அடித்துக் கொல்லப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில் தொழிற்சாலை உரிமையாளர் மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...