காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

தஞ்சாவூர்: காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. காவிரி ஆற்றின் கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடி மாதத்தில் 18-வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்காகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து காவிரி ஆறுகளில் புது வெள்ளம் பொங்கி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்....

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By Arun Kumar
03 Aug 2025

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது. பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதி மற்றும் அணை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோவை...

7-வது முறையாக திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

By Arun Kumar
03 Aug 2025

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைந்து வெல்வோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 7ல் கலைஞர் நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் திமுகவினர் கடலென திரள வேண்டும். 7-வது முறையாக திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம். எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவோ, அடங்கி ஒடுங்கி பாஜகவுக்கு...

ஸ்பெயினிடமிருந்து சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா

By Arun Kumar
03 Aug 2025

டெல்லி: ஸ்பெயினிடமிருந்து 16வது சி-295 ரக ராணுவ விமானம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது. ஸ்பெயினிடம் இருந்து இந்தியா பெறும் கடைசி சி-295 ரக போர் விமானம் இதுவாகும். 2021ல் ஸ்பெயினுடன் 56 சி -295 ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்தது. 16 சி-295 போர் விமானங்கள் வழங்கப்பட்ட நிலையில் 40...

தமிழ்நாடு முழுவதும் 1,256 மருத்துவ முகாம்கள்: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

By Arun Kumar
02 Aug 2025

* சனிக்கிழமை தோறும் நடைபெறும் * பரிசோதனை முடிவுகள் உடனே தெரிந்து கொள்ளலாம் * நோயாளிகளை இனிமேல் மருத்துவ பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் * முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை: ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சனிக்கிழமை தோறும் 1,256 மருத்துவ முகாம்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது....

உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By Suresh
02 Aug 2025

சென்னை: "உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு" என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் முதல்வர் பதிவிட்டுள்ளதாவது; "உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு. அதனால்தான், துணை முதலமைச்சராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன்; முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்,...

வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை உட்பட காஞ்சிபுரம், திருவள் ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

By Suresh
02 Aug 2025

சென்னை: 2025-2026 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென தமிழக அரசு ரூ.38.00 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்து அதன்படி சென்னை பெருநகர எல்லைக்குள். 15 மண்டலங்களில் 78 பணிகளும், சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள் ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 117 பணிகளும் தொடங்கி நீர்வளத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இதில்...

இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்து 6 மாதத்தில் ரூ.4.41 லட்சம் கோடியை குவித்த ரஷ்யா: அமெரிக்காவின் கண்ணை உறுத்துவதால் கடுப்பாகும் டிரம்ப்

By Suresh
02 Aug 2025

புதுடெல்லி: உக்ரைன் போருக்குப் பிறகு குறைந்த விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து பல லட்சம் கோடி ரூபாயை ஈட்டிக் கொடுத்துள்ளது. இதனை பொறுக்கமாட்டாத அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிராக புதிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, 1992ம் ஆண்டு முதலே...

சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு..!!

By Lavanya
02 Aug 2025

  சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-ஐ ஆகஸ்ட் .15-குள் செலுத்துவதாக சென்னை உய்ரநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் கப்பலூர், எட்டூர் வட்டம், சாலைப் புதூர், நாங்குநேரி உள்ளிட்ட 4 சுங்கச் சாவடிகளில் தமிழக அரசு செலுத்த வேண்டிய...

கர்நாடகாவை உலுக்கிய வழக்கு; முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

By Lavanya
02 Aug 2025

கர்நாடகா: பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு: பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர்...