பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க முடிவு
விழுப்புரம்; பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் அன்புமணியை கட்சியை விட்டே நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றுவதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாமக தலைவராக...
டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் பெங்களூருவில் தரையிறக்கம்
சென்னை: டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம், தரையிறங்காமல் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு பெங்களூர் சென்று தரையிறங்கியது. அதன் பின்பு அந்த விமானம் நள்ளிரவில் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது. இதை அடுத்து நேற்று இரவு 9.40 மணிக்கு சென்னையில்...
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும்...
2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி 90 கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு: அனிருத், சாய் பல்லவி, எஸ்.ஜே.சூர்யா, பூச்சி முருகனுக்கு விருது, கே.ஜே.யேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு நேற்று கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. கடந்த 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் விருதாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கி...
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவு; முதலமைச்சர் இரங்கல்!
சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56) உடல் நலக் குறைவால் காலமானார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பணியாற்றியவர். இதனிடையே, பீலா வெங்கடேசன்...
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல் நலக் குறைவால் காலமானார்!
சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56) உடல் நலக் குறைவால் காலமானார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பணியாற்றியவர். இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
டெல்லியில் கல்லூரி மாணவிகளுக்கு சாமியார் பாலியல் தொல்லை: வெளியான அதிர்ச்சித் தகவல்!
டெல்லி: டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் நிர்வாகியாக இருந்த சுவாமி சைதன்யானந்தா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 மாணவிகள் போலீசாரிடம் புகார் கொடுத்த நிலையில் தலைமறைவானார். மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, மெசேஜ் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், சாமியாரின் கோரிக்கையை நிறைவேற்றும்படி அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மாணவிகளை நிர்ப்பந்தம் செய்ததாகவும் அதிர்ச்சித்...
நோபல் பரிசு வேண்டுமெனில் காசா போரை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் : பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வலியுறுத்தல்!!
வாஷிங்டன் : அமெரிக்கா அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காசா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மேக்ரான், "ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் காசாவில் அமைதி திரும்ப வேண்டுமென ட்ரம்ப் வலியுறுத்தினார். காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு...
லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம்..!!
லடாக்: லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் ஒன்றாக இருந்தது. 2019ம் ஆண்டு இவை இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு யுனியன் பிரதேசங்களாக மாறியது. அப்போது முதலே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க...