கட்டணமில்லா அறுபடைவீடு ஆன்மிக பயணம்; தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத்...
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ரஷ்யா : மீண்டும் பனிப்போர் காலத்து பயங்கரமா?
மாஸ்கோ: பனிப்போர் கால பதற்றத்தைத் தணிக்க 1987ம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே கையெழுத்தான ‘நடுத்தர தொலைவு அணுசக்தி ஏவுகணைகள் ஒப்பந்தம்’ (ஐஎன்எஃப்), உலக ஆயுதக் கட்டுப்பாட்டின் மூலக்கல்லாகக் கருதப்பட்டது. ஆனால், ரஷ்யா தடை செய்யப்பட்ட ஏவுகணையை உருவாக்கியதாகக் கூறி, 2019ல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. தொடர்ந்து, அமெரிக்கா ஏவுகணைகளை...
நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகும் கை ரிக்ஷா புழக்கத்தில் இருப்பதாக நீதிபதிகள் வேதனை
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் கை ரிட்சவிற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மதேரன் என்ற சுற்றுலா நகரத்தில் கை ரிக்ஷா பயன்பாடு தற்போது நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆனபிறகும் ஒரு மனிதனை உக்காரவைத்து இன்னொரு...
ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு:கோரிக்கை மனுவையும் அளித்தனர்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம், முத்தரசன் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற கோரி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள...
ரயில் விபத்து எதிரொலி; பணியாளர்களை தீவிரமாக கண்காணிக்கும் ரயில்வே நிர்வாகம்
சென்னை: விபத்துகள் தொடர்வதையடுத்து பணியாளர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது. இந்திய ரயில்வே, நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக, 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களையும், பராமரிப்பு, உணவு வழங்கல், தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகளில் ஏராளமான ஒப்பந்தப் பணியாளர்களையும் கொண்டுள்ளது. இந்நிலையில், ரயில் இயக்கத்தின் போது விபத்து போன்ற செயல்களைத் தடுக்க,...
டொனால்டு டிரம்புடன் பேசமாட்டேன்; மோடி, ஜின்பிங்குடன் பேச போகிறேன்: அமெரிக்கா மீது பிரேசில் அதிபர் காட்டம்
பிரேசிலியா: அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகளுக்கு மத்தியில், அந்நாட்டு அதிபர் டிரம்பிடம் பேசமாட்டேன். இந்திய பிரதமர், சீனப் பிரதமரிடம் பேசப்போகிறேன் என பிரேசில் அதிபர் லூலா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையேயான வர்த்தக உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 40% வரியை விதித்ததால், மொத்த...
ஆகஸ்ட் 31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி: எல்லைப் பிரச்சனை, இருநாட்டு உறவு குறித்து பேச வாய்ப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனிடையே சீனாவில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும்...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு மத்தியில் ரஷ்யா பறந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: விரைவில் அமைச்சர் ஜெய்சங்கரும் பயணம்
புதுடெல்லி: ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் தற்சார்பு வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்டும் வகையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ சென்றுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதையும், உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகிப்பதையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும்,...
உடுமலை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
திருப்பூர்: உடுமலை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன் தங்கப்பாண்டியன் (32) ஆகியோர் தங்கியிருந்து...