தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வானிலை மையம்...
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்தாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என தலைமை நீதிபதி...
2 ஆயிரம் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!
சென்னை: இணையம் சார்ந்த உணவு டெலிவரி ஊழியர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இதற்காக நலவாரியம் அமைத்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது. இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் இது தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகள் வழங்கப்பட்டது. அதன்படி இணையம் சார்ந்த ஊழியர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் குண்டர் சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகேந்திரன்...
முதலமைச்சர் தெரிவித்துள்ளது போல், விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டி சாதனை படைக்கும் என்பது உறுதி: அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சதவிகிதத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் எட்டியுள்ளது என்ற சாதனை முதலமைச்சர் நிர்வாகத்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சதவிகிதத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் எட்டியுள்ளது என்ற சாதனை தமிழ்நாடு முதலமைச்சர்...
உடுமலை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி...
உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ சண்முகவேல் வெட்டிக் கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சிக்கனூத்து கிராமத்தில் அதிமுகவை சேர்ந்த மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேர்ந்திரன் தோட்டம் உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் தோட்டப்பணியாளர்களாக பணியாற்றிவருகின்றனர். அதிகாலையில் அவர்கள் குடுபோதையில் ரகளை செய்வதாக காவல்நிலையத்துக்கு புகார் வந்துள்ளது. இதனை விசாரிப்பதற்காக எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவல் ஓட்டுநர்...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று இந்திய எல்லையான கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பழுதாகி நின்ற விசைப்படகு மற்றும் அதில் இருந்த 10 மீனவர்களை சிறைபிடித்தனர். சிறைபிடித்த 10 மீனவர்கள் மீது எல்லை தாண்டி...
உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பால் பயங்கரம் 70 பேர் மண்ணில் புதைந்தனர்: கீர் கங்கா நதியின் வெள்ளப்பெருக்கில் கிராமமே அடித்துச் செல்லப்பட்டது; 4 சடலங்கள் மீட்பு; மேலும் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
உத்தரகாசி: உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட மேகவெடிப்பால், கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. இதில், 70க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர். இந்த பயங்கர இயற்கை பேரிடரில் 4 பேரின் சடலம் மட்டுமே...