மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை : அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி பதிலடி
புதுடெல்லி : அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரி விவகாரத்தையடுத்து விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதாலே உக்ரைன் போர் நடப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரி விதித்துள்ளார். முதலில் 25% வரி விதித்த நிலையில், தற்போது கூடுதலாக...
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் பலி..!!
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் உள்ள இடத்திற்குச் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் தானாக முன்வந்து உதவ முன்வந்துள்ளனர்....
விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை :எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று!தமது...
அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில் வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
சென்னை : அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில் வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி,...
இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
சென்னை: இலங்கை கைது செய்த தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியதாவது; இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நேற்று (06.08.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக...
தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வியட்நாம் நாட்டுடன் போட்டியிடுவதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு
வாஷிங்டன் : தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வியட்நாம் நாட்டுடன் போட்டியிடுவதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் ரோசோ பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருளாதார நிபுணரும் சிஎஸ்ஐஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் ரோசோ ப்ளூம்பர்க் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தொழிற் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில்...
கலைஞரின் ஒளியில் "எதிலும் தமிழ்நாடு முதலிடம்" எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை: தந்தை பெரியாரும், அண்ணாவும் தமிழினத்துக்கு தந்த நெருப்பு கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தலைவர் கலைஞர் - முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த...
கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியை தொடங்கியுள்ளனர். ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கி, கலைஞர் நினைவிட வரை செல்லும் பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னீட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது...
உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு
திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த தங்கப்பாண்டியன் (32) தனது மனைவி, மகன்,...