பீகாரில் சுய தொழில் செய்வதற்காக 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
புதுடெல்லி: பீகாரில் சுய தொழில் செய்வதற்காக 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிய உள்ளது. இதனால், நவம்பர் அல்லது டிசம்பரில்...
அமலாக்கத்துறைக்கு எதிராக சென்னை ஐகோர்ட் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி : டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டாஸ்மாக் தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த மனுவை...
ரூ.10,000 கோடி நிதி தர மறுத்தாலும் மும்மொழியை ஏற்க மாட்டோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை: ரூ.10,000 கோடி நிதி தர மறுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர்; நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் இல்லை. வாரத்துக்கு 5 நாள் வெளியூரில்தான் இருப்பேன், சனி மட்டும் வீட்டை...
சாதனை மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தரப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித்தரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தது. முதல் பகுதியாக, முதல்வரின் காலை உணவுத் திட்டம்...
இந்திய விமானப் படையில் இருந்து மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெற்றன
சண்டிகர்: இந்திய விமானப் படையில் இருந்து மிக் 21 ரக போர் விமானங்கள் விடைபெற்றன. இந்திய விமானப் படையில் ஆற்றிய 62 ஆண்டுகால சேவை முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவத்தில் 62 ஆண்டுகள் மிக் 21 ரக போர் விமானங்கள் சேவையாற்றின. மிக் 21 ரக போர் விமானங்களுக்கு பதில் இந்திய ராணுவத்தில் தேஜஸ் போர்...
மத்திய வடக்கு வங்க கடல் பகுதிகளில்நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது: வானிலை மையம்
சென்னை: மத்திய வடக்கு வங்க கடல் பகுதிகளில்நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை வடக்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் - மேற்கு வங்க பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை அளவில் வலுகுறைந்தது. இருப்பினும், நேற்று வளிமண்டல மேலடுக்கு...
ஆவினில் இனிப்பு வகைகள் விற்பனை குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது
சென்னை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், துறை சார்பான திட்டப் பணிகளும் மற்றும் எதிர்வரும் பண்டிகையை முன்னிட்டு ஆவினில் இனிப்பு வகைகள் விற்பனை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. ஆய்வு செய்ததுடன் நடப்பாண்டில் சென்ற ஆண்டை விட சராசரியாக 1.68 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் உயர்ந்துள்ளது என...
காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை : இயக்குனரகம் எச்சரிக்கை
சென்னை : காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு...
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் :அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி
வாஷிங்டன் : வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டு இருப்பது இந்திய மருந்து நிறுவனங்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து...