உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பால் பயங்கரம் 70 பேர் மண்ணில் புதைந்தனர்: கீர் கங்கா நதியின் வெள்ளப்பெருக்கில் கிராமமே அடித்துச் செல்லப்பட்டது; 4 சடலங்கள் மீட்பு; மேலும் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
உத்தரகாசி: உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட மேகவெடிப்பால், கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. இதில், 70க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர். இந்த பயங்கர இயற்கை பேரிடரில் 4 பேரின் சடலம் மட்டுமே...
அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கான வரி கணிசமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கான வரி கணிசமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிகமான வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு...
உத்தரகாசி காட்டாற்று வெள்ளம்; 10 ராணுவ வீரர்களின் கதி என்ன?.. மீட்புப் பணியில் ராணுவம், பேரிடர் மீட்புப் படை
உத்தராகண்ட்: உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாசி அருகே உள்ள தாரல்லி, சுஹி டாப், ஹர்சில் ஆகிய 3 இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியை 150-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்...
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
தென்காசி: 2026 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். தென்காசி சட்டமன்றத்...
பருவமழை தொடங்கும் முன் அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
சென்னை: பருவமழை தொடங்கும் முன் அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு...
நீண்டகால உள்துறை அமைச்சர்: அத்வானியை பின்னுக்கு தள்ளிய அமித் ஷா
டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சராக பணியாற்றும் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் சாதனையை முறியடித்து, நாட்டின் நீண்டகால உள்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கடந்த 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரை, அதாவது 2,256 நாட்கள் நாட்டின் உள்துறை...
5 பேருக்கு ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன ஆணை: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
சென்னை: 5 நபர்களுக்கு ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன ஆணையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். சென்னை முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள்...
ஆதாரங்கள் இல்லை.. டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!!
டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மற்றும் அதிகாரிகள் மீது 2018ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொதுப்பணித் துறையில் முறைகேடாக ஆள்களை...
வார இறுதி நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதிகளில் 1,040 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதிகளில் 1,040 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதி சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான...