வெம்பக்கோட்டையில் பணி புறக்கணிப்பு போராட்டம்
ஏழாயிரம்பண்ணை, செப்.26: வெம்பக்கோட்டையில் வருவாய் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை விசாரிக்க போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும், ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுவதை கைவிட வேண்டும், இத்திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல்...
அரசு கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் தூய்மை பணி
சாத்தூர், செப்.26: சாத்தூர் ரயில் நிலையத்தில் அரசுக்கல்லூரி மாணவர்கள் தூய்ைம பணியில் ஈடுபட்டனர். சாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் சாத்தூர் ரயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். தூய்மைபடுத்தும் பணியை சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட...
காரியாபட்டியில் விதிமீறி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்
காரியாபட்டி, செப்.25: காரியாபட்டியில் விதிமீறி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதிகளில் அனுமதி இல்லாமல் ஆட்டோக்களில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றுவதாக விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று விருதுநகர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வராஜ், காரியாபட்டி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது...
அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
விருதுநகர், செப்.25: தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் விருதுநகர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்....
தொடர் காத்திருப்பு போராட்டம்
விருதுநகர், செப்.25: பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 38 நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். வாரிசு பணியாளர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு...
ஏழ்மை நிலையில் வாடும் மாணவருக்கு கல்வி உதவித்தொகை: அசோகன் எம்எல்ஏ வழங்கினார்
சிவகாசி, செப்.24: சிவகாசி பள்ளபட்டி தில்லை நகரில் ஏழ்மையில் வாடும் கல்லூரி மாணவருக்கு அசோகன் எம்எல்ஏ கல்வி உதவித்தொகை வழங்கினார். சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு அசோகன் எம்எல்ஏ...
மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ
வில்லிபுத்தூர், செப்.24: வில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி பகுதியில் மேகமலை புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அழகர் கோயிலுக்கு மேல் பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின் பேரில் வில்லிபுத்தூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் மலைவாழ் மக்களுடன் சம்பவ...
பகுதி வாரியாக பிரித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை நடத்த கோரிக்கை
சிவகங்கை, செப். 24: தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொது செயலாளர் இளங்கோ கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெறுவது, குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெற வைப்பது, 100 விழுக்காடு அனைவரும் தேர்ச்சி பெற வைப்பது உள்ளிட்டவை தொடர்பான...
சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் பணிகள் 95% நிறைவு: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
சிவகாசி, செப்.23: சிவகாசி ரயில்வே மேம்பாலம் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக திறந்து விட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் திராவிட மாடல் அரசில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிவகாசி பகுதியில்...