முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா
மானாமதுரை, அக்.29: மானாமதுரையில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நடந்தது. மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி சன்னதியில் நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு பால்,சந்தனம், இளநீர், தயிர் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வெள்ளிகவசம் சார்த்தி சிறப்பு அலங்காரத்தில்...
பலத்த காற்றுடன் மழை மரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்
ராஜபாளையம், அக்.29: ராஜபாளையத்தில் மழைக்கு மரம் சாய்ந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதில் பெரிய வேப்பமரம் ஒன்று வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் 4 மின்கம்பங்கள் ஒன்றோடு ஒன்று...
குடிநீர் விநியோகம் கோரி வல்லம்பட்டி மக்கள் சாலை மறியல்
ஏழாயிரம்பண்ணை, அக். 28: வெம்பக்கோட்டை அருகே, குடிநீர் விநியோகம் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, வெம்பக்கோட்டை ஊராட்சியில் வல்லம்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள பொதுமக்களுக்கு வெம்பக்கோட்டை அணை மற்றும் மானூத்து ஆகிய இரண்டு இடங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக...
பன்றி திருடியவர் கைது
சிவகாசி, அக்.28: சிவகாசி அருகே பன்றியை திருடிச் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே நாரணாபுரம் ரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவர் மாடு, பன்றிகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் சாமி கும்பிட குலசேகரபட்டினத்துக்கு சென்றுள்ளார். வீடு திரும்பிய போது வீட்டில் கட்டி...
சூதாட்ட கும்பல் கைது
சிவகாசி, அக்.28: சிவகாசி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் திருத்தங்கல் எஸ்ஐ பாண்டியராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டில் பணம் வைத்து சூதாடிய முனீஸ்வரன்(42), அழகர்(36), நாகராஜ்(35), சுப்புராஜ்(48), மாரியப்பன்(46), கார்த்திக்(33), பிரகாஷ்(42) ஆகியோரை கைது செய்தனர். சீட்டு...
பயன்பாட்டிற்கு வந்தது புதிய தாலுகா அலுவலகம்
வில்லிபுத்தூர், அக்.25: வில்லிபுத்தூரில் ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தாலுகா அலுவலகத்தை கடந்த மாதம் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் நேற்று காலை புதிய தாலுகா அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் சுகபுத்ரா மற்றும் வில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர்...
ெபாதுமக்களை தேடி சென்று தமிழ்நாடு அரசு சேவையாற்றுகிறது: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பேச்சு
ராஜபாளையம், அக்.25: ராஜபாளையம் தொகுதி கணபதிசுந்தரநாச்சியார்புரம் மற்றும் சுந்தரராஜபுரம் ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் பேசிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, ‘‘மக்களைத்தேடி தேடி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சேவையாற்றி வருகிறது. ஆகவே பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின்...
மருது சகோதரர்கள் படத்திற்கு காங்கிரஸ் சார்பில் மரியாதை
சாத்தூர், அக்.25: சாத்தூரில் மருது சகோதரர்கள் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், மாமன்னர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் அய்யப்பன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சாத்தூர்...
மது கடத்தியவர் மீது குண்டாஸ்
விருதுநகர், அக். 24: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் புவனேஷ்(25). இவர் தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செப்.16 அன்று காரில் புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவதாக விருதுநகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாத்தூர் டோல்கேட் அருகே போலீசார் நிறுத்திய போது, புவனேஷ் காருடன்...