மேகமலை புலிகள் காப்பக கேமராக்களில் புலிகள் பதிவு துணை இயக்குனர் தகவல்
ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 31: மேகமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்க வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் புலிகள் பதிவாகியுள்ளது என, துணை இயக்குநர் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க அலுவலகத்தில் வனத்துறையினருக்கு நேற்று பயிற்சி முகாம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். இதில் ஏசிஎப் ஞானப்பழம் உள்ளிட்ட அதிகாரிகள்...
சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு சிறை
சிவகங்கை, அக். 31: மதுரை மாவட்டம் கே.புதூர் அருகே கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (எ) குமார் (41). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவர். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் காளையார்கோவிலில் தங்கி கட்டிட வேலை பார்த்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடத்திச் சென்று...
வடகிழக்கு பருவமழையால் மினி குற்றாலத்தில் நீர்வரத்து துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.30: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் மினி குற்றாலம் என அழைக்கப்படும் மீன் வெட்டி பாறை அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கொளுத்தும் வெயில், தொடர்ச்சியான மலையின்மை ஆகியவற்றின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மினி குற்றாலம் என அழைக்கப்படும் மீன் வெட்டி பாறை அருவி வறண்டு போய் இருந்தது. இந்த...
வீட்டில் பதுக்கிய மது பறிமுதல்
ஏழாயிரம்பண்ணை, அக்.30: வெம்பக்கோட்டை அருகே சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணி அம்பேத்கர் காலனி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது...
அரசு ஊழியர்கள் தர்ணா
விருதுநகர், அக். 30: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து...
கட்டிடத்தில் பதுக்கிய கருந்திரி பறிமுதல்
சிவகாசி, அக்.29: சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரம் விஏஓ ராஜகுரு. இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஞ்சவடிவு என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எவ்வித அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார்...
முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா
மானாமதுரை, அக்.29: மானாமதுரையில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நடந்தது. மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி சன்னதியில் நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு பால்,சந்தனம், இளநீர், தயிர் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வெள்ளிகவசம் சார்த்தி சிறப்பு அலங்காரத்தில்...
பலத்த காற்றுடன் மழை மரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்
ராஜபாளையம், அக்.29: ராஜபாளையத்தில் மழைக்கு மரம் சாய்ந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதில் பெரிய வேப்பமரம் ஒன்று வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் 4 மின்கம்பங்கள் ஒன்றோடு ஒன்று...
குடிநீர் விநியோகம் கோரி வல்லம்பட்டி மக்கள் சாலை மறியல்
ஏழாயிரம்பண்ணை, அக். 28: வெம்பக்கோட்டை அருகே, குடிநீர் விநியோகம் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, வெம்பக்கோட்டை ஊராட்சியில் வல்லம்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள பொதுமக்களுக்கு வெம்பக்கோட்டை அணை மற்றும் மானூத்து ஆகிய இரண்டு இடங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக...